கொக்கிளாயில் சிங்களவர் பாரம்பரியமாக வாழவில்லை என்பதை 1965ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உறுதிப்படுத்துகின்றது. இதிலிருந்து கொக்கிளாயில் தமிழர்களின் கரை வலைப்பாடுகளே உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இப்பகுதியில் சிங்களவர்களே அடாத்தாக கரை வலைப்பாடுகள் அமைத்து தொழில் செய்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலைக் கட்டுப்படுத்தல் மற்றும் தமிழர்களின் கரை வலைப்பாடுகளில் சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.
இதிலேயே கொக்கிளாய்ப் பிரதேசத்தில் தமிழர்களே காலங்காலமாக கரைவலைப்பாடுகளை அமைத்து தொழில் செய்து வந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.