
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்
எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன் இன்னும் அதிக காலம் பூலோகத்தில் வாழப்போவதில்லை என்றும் அவர் மேலோகம் சென்றாலும் அங்கு அவரால் நின்மதியாக வாழமுடியாது நான் ஆறுமாதமாக பூசாவில் இருந்தேன் ஆனால் ஏழு வருடங்களாக பல போராளிகள் சிறையில் வாடுகின்றார்கள் அத்தோடு மாவீரர்கள் மற்றும் மூன்று இலட்சம் பொதுமக்களின் உயிர்த்தியாகம் அவர்களை சும்மா விடாது எனவும் இரு மாவீரர்களின் சகோதரரும் முன்னாள் முதுநிலை போராளியுமான சந்துரு மேற்படி கருத்தை தெரிவித்தார்.(51ஆவது நிமிடத்திலிருந்து பாருங்கள்)
அவர் மேலும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
தமிழர்களின் தலைவராக அனைத்து விடயங்களை தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்த தலைவர் ஓரு விடயத்தில் தவறிவிட்டதாகவும் கவலையுற்றார்.
பட்டினியால் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டதை அறிந்து பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தை தொடக்கிவைத்தவர். கரும்புலியாகிச் சென்ற காந்தரூபனின் வேண்டுகோளை ஏற்று காந்தரூபன் அறிவுச்சோலையை தொடக்கிவைத்தவர். நவம் என்ற மாவீரனின் வேண்டுகோளை ஏற்று அங்கவீனமடைந்த போராளிகளின் வளர்ச்சிக்காக நவம் அறிவுக்கூடத்தை நிறுவியவர். ஆனால் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்போகான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தலைமையை தெரிவுசெய்வதில் தவறிவிட்டார் என மனவருத்தத்துடன் தெரிவித்தார்.
ஏழு வருடங்களாக தடுப்பில் உள்ளவர்களை விடுவிப்பதில் கூட அக்கறையெடுக்காமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக சம்பந்தனை சந்திப்பதற்காக தடுப்பிலிருந்து விடுதலையானவர்கள் சென்று சந்தித்தபோதும் அவர்களது கவலைகளை கேட்காமல் பத்திரிகை வாசித்துக்கொண்டு அலட்சியம் செய்யப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.