தற்போதைய உள்துறையமைச்சர் தெரேசா மே நாளை புதன்கிழமை மாலை பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து மரபு ரீதியாக என்ன நடக்கும் என்று அறியும் ஆவல் இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டுமென சர்வஜன வாக்கெடுப்பு முடிவு வெளிப்பட்டதும் கடந்த மாதம் 24 ஆம் திகதி பிரதமர் டேவிட்கமரன் தனது பதவி விலகும் முடிவை அறிவித்திருந்தார்.
ஆயினும் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை மகாராணி எலிசபெத்திடம் கையளிக்கவில்லை.
இந்தநிலையில் நாளை மறுதினம் மாலை பக்கிங்காம் அரண்மனைக்குச் செல்லும் டேவிட் கமரன் தனது பதவி விலகல் கடிதத்தை மகாராணியிடம் அதிகார பூர்வமாக கையளிப்பார்.
இதன் பின்னர் தான் கொன்சவேட்டிவ் கட்சியில் அடுத்து பதவிக்காக காத்திருக்கும் தெரேசா மே க்கு மகாராணி அழைப்பு விடுத்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும்படி கோருவார். அதன் பின்னர் புதிய தலைமையமைச்சரும் அவரது தலைமையின் கீழான புதிய அமைச்சரவையும் உருவாக்கப்படும்
எலிசபெத் மகாராணியின் முடியாட்சியின் கீழ் பிரித்தானியா சந்திக்கும் 13 ஆவது பிரதமராக தெரேசா மே வருகிறார்.
நாளை மறுதினம் பிரித்தானியப் பிரதமராகிறார் தெரேசா மே (இரண்டாம் இணைப்பு)
கொன்சவேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள பிரித்தானிய உட்துறையமைச்சர் தெரேசா மே எதிர்வரும் புதன்கிழமை மாலை பிரதமராக பொறுப்பு ஏற்கவுள்ளார்
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலின்படி கட்சிக்குரிய புதிய தலைவர் தெரிவு இடம்பெற்ற பின்னர் தற்போதைய பிரதமர் டேவிட் கமரன் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பதவியிறங்கி புதிய தலைவரிடம் அதனைக் கையளிப்பதாக இருந்தது.
ஆனால தற்போதைய நிலைவரப்படி கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டிக்களத்தில் இருந்து அன்றியா லீட்சம் விலகியுள்ளதால் தேர்தல் இல்லாமலேயே தெரேசா மே தலைவராகின்றார்.
இந்த துரித நகர்வுகளின் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை டேவிட் கமரன் நாடாளுமன்றத்தில் தனது வராந்த கேள்வி நேர அமர்வை நிறைவு செய்த பின்னர் பதவி விலகுகின்றார். இதனை அடுத்து அன்று மாலையே தெரேசா மே புதிய பிரதமரமாக பதவி ஏற்கவுள்ளர்.
அதன் பின்னர் புதிய பிரதமர் தெரேசா மே தனக்குரிய புதிய அமைச்சரவையை அறிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக திரேசா மே!!
பிரித்தானியக் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டிக் களத்தில்இருந்து அன்றியா லீட்சம் இன்று விலகியுள்ளார்.
அன்றியா லீட்சமின் இந்த நகர்வு மூலமாக கென்சவேட்டிவ் கட்சி மற்றும் பிரதமராக திரேசா மே பொறுப்பேற்க உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டுமென குடியொப்ப வாக்கெடுப்பு முடிவு வெளிப்பட்டதும் அதன் தாக்கம் நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளிலும் எதிரொலித்தது.
ஆளும் தரப்பில் பிரதமர் டேவிட்கமரன் தனது பதவி விலகும் முடிவை அறிவித்ததும் கட்சியின் தலைமைத்துவத்துக்கு யார் வருவதென்ற போட்டி ஆரம்பமானது.
அதேபோல எதிர்க் கட்சியான தொழிற் கட்சியிலும் தலைமைத்துவ நெருக்கடிகள் தோன்றியிருந்தன. குறிப்பாக தொழிற் கட்சித் தலைவரான ஜெரமி கோர்பின் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்த நிலையில் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான உட்கட்சித் தேர்தல் இடம்பெற்று இறுதிப் போட்டியாளர்களாக திரேசா மேயும் அன்றியா லீட்சமும் தெரிவாகியிருந்தனர்
இந்த நிலையில் இறுதிப் போட்டியிலிருந்து தான் விலகுவதாக அன்றியா லீட்சம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
ஒரு தாயாராக இருக்கும் தனக்கு பிரதமராக வரும் தகுதி அதிகம் இருப்பதாக அன்றியா லீட்சம் கடந்தவாரம் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைக்கு உள்ளாக்கபட்டிருந்தது.
தனது போட்டியாளரான திரேசா மேயை புண்படுத்தும் வகையில் அன்றியா லீட்சம் இந்த கருத்தைதெரிவித்ததாக விமர்ச்சிக்கபட்டிருந்தது. இதனையடுத்து தனது கருத்துக்காக அன்றியா லீட்சம் நேற்று வருத்தம் தெரிவித்ததுடன், திரேசா மேயிடம் மன்னிப்பும் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.