யாழ்ப்பாணம் வலிவடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவைக்கும் வகையில் தண்ணீர் தாங்கிகள் அமைக்கப்பட்டு அவை மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் சுவாமிநாதனிடம் ஊடகவியலாளர்கள், கேள்விகளைத் தொடுத்த போதிலும், அமைச்சர் நழுவல் போக்கில் பதில் கூறினார்.
இறுதிக் கட்டப் யுத்தத்தின் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்துவருவதாக, யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட, முன்னாள் போராளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இவ்வாறான ஒரு நிலையில், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும், இதனால் மீண்டும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு பேராளிகளை முற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர், இது குறித்து அறிய தான் ஒரு வைத்தியரா? என்றும், இதனை சுகாதார அமைச்சிடம் கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.