அண்மையில் ஹப்புத்தளை பிரதேசத்தில் 14 வயதான சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 வயதான தமிழ் சிறுமியை , 29 வயதான பஸ் சாரதி ஒருவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை பொலிஸார் மூடி மறைக்க முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையின் போது உண்மைகளை வெளிப்படுத்த வேண்டாம் எனபெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த சிறுமியை அச்சுறுத்தி தாக்கியதாகத்தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்கள் , அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது குறித்த சிறுமி கடத்தல் மற்றும் பாலியல்வன்கொடுமை பற்றிய விபரங்களை சட்ட வைத்திய அதகாரியிடம் அம்பலப்படுத்தியுள்ளதாகஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் குறித்த சிறுமி இரண்டு தடவைகள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விபரங்களை வெளியிட்டால் குடும்பத்தையே இல்லாமல் செய்து விடுவதாக பெண் பொலிஸ்உத்தியோகத்தர் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை உரிய முறையில் விசாரணை செய்யப்படவேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.