தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமந்திரன் உட்பட எந்தவொரு தரப்பினரின் வலியுறுத்தலுக்கு அமையவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையின் நீதித்துறை சார்ந்த விடயங்களில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளருமாகிய டிலான் பெரேரா கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையில் எவ்விதத்திலும் சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் அது எமது நாட்டின் நீதித்துறைக்கு சவாலாக அமைந்து விடும். மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனிவாவில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் என்ற பதத்தினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயத்தில் எவ்விதத்திலும் சர்வதேச நீதிபதிகளின் உதவிகள் பெற்றுக்கொள்ள மாட்டாது என ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த முடிவே எமது கட்சியின் முடிவாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விசாரணை பொறிமுறையில் ‘வெளிநாட்டு பங்குபற்றல்’ என்ற பதத்திற்கே இடமில்லை: ஸ்ரீ.சு.க

Related Post:
Add Comments