நரி தப்பியோட்டம், மக்களால் காவல்துறை நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது!

நரி தப்பியோட்டம், மக்களால் காவல்துறை நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டம் திராய்மடு, சுவிஸ் கிராம மக்கள் நேற்றிரவு (வியாழக்கிழமை) இரவு 8.00 மணியிலிருந்து திராய்மடு காவல்துறை நிலையத்துக்கு முன்பு பெரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கடந்த 2006ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது தாய் தந்தையை இழந்த திராய்மடுக் கிராமத்து சிறுமியொருவரின் வீட்டின் முன்பாக நரி என அழைக்கப்படும் குணசேன எனும் நபர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்த சிறுமியின் சகோதரன் அவரை அந்த இடத்தைவிட்டு அகன்று செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரி கடந்த கிழமை சிறுமியின் சகோதனைத் தாக்கி காயத்திற்குள்ளாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நரி என அழைக்கப்படும் குணசேனவைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையைவிட்டு தப்பிச்சென்ற நரி வீதியால் சென்றவர்களின் கழுத்தில் வாளை வைத்து மிரட்டியுள்ளார். கோபமடைந்த பிரதேச வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து குறித்த சம்பவம் தெடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து சம்பந்தபட்ட நரி என்பவரும் நரியினால் தாக்கப்பட் ட 6 பேரும் விசாரணைகளின் பின் காவல்துறை நிலைய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறிது நேரத்தின் பின் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்த நரி தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த பொது மக்கள் பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொலிசார் எவ்வாறு குறித்த நபரை தப்பிக்கவிட முடியும் என கோரி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் நேற்று இரவு 8 மணி முதல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாகாணசபை உறுப்பினர்கள் இரா.துரைரட்ணம் மற்றும் இந்திரகுமார் ஆகியோர் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டுசென்றனர்.
அரசாங்க அதிபர் பிரச்சனை தொடர்பாக ஆராயுமாறு மட்டக்களப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அரசாங்க அதிபரின் உத்தரவுக்கமைய நரியினால் தாக்கப்பட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 24 மணித்தியாலத்துக்குள் நரியைக் கைதுசெய்வதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வர்த்தகரை கைதுசெய்யும் நோக்கில் பெருமளவான
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila