நேற்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அநுராதபுரச் சிறைச்சாலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக 12 வழக்குகள் நடைபெற்று வருவதாகவும், அவற்றை வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறும் கோரியிருந்தார்.
அதற்கு டி.எம்.சுவாமிநாதன் இது தொடர்பாக நான் முடிவெடுக்க முடியாது எனவும், இதற்கு நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவே முடிவெடுக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் நீங்கள் கடிதம் அனுப்பினால் நான் அது தொடர்பாக கதைத்து முடிவெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
குறித்த நாடாளுமன்ற அமர்வு தொடர்பான காணொளியை நீங்கள் இங்கே பார்க்கலாம்.