3 நாள் பயணமாக இலங்கை வந்தடைந்துள்ள பான்கிமூன் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினையும், உள்நாட்டு விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்பதிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருப்பதால், பான்கிமூனைச் அவர் சந்தித்தால் பல விடயங்கள் பகிரங்கமாக சி.வி.விக்னேஸ்வரன் முன்வைப்பார் என்பதால் அரசாங்கத்தினாலும் சம்பந்தனினாலும் இது திட்டமிட்டு தடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம், மற்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்குப் பயணம் செய்யும் ஐநா செயலர் பான்கிமூன் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதாக கொழும்பிலுள்ள ஐநா அலுவலகம் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) அறிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.