கூடத்தில் சக்தி தொலைக்காட்சி சேவையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் பதிவு செய்துகொண்டிருந்த சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்திரனும் ஊடகவியலாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.
அத்துடன் கூட்டத்தில் கேள்விகேட்ட ஒருவரையும் கூட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விடுவேன் என இரு தடவைகள் மிரட்டியுள்ளதோடு உப்பளம் ஒன்று அமைப்பதுதொடர்பில் மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தபோது அது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது அதில் மாற்றங்களை யாராவது செய்ய முனைந்தால் நான் சும்மா இருக்கப்போவதில்லை மற்ற ஒருங்கிணைப்பு குழு தலைவர்களை போல நான் இருக்கமாட்டேன் மிகக்கடுமையாக உங்கள்மீதே ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வேன் எனவும் மிரட்டியிருந்ததோடு அது மாவட்ட செயலாளராகவும் இருக்கலாம் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதற்கு மக்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளர். தகவல் உரிமைச்சட்டம் நல்லாட்சி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளபோதிலும், கூட்டத்தில் ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை கண்டனத்துக்குரியதே எனப் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.