காற்றில் பறந்தது எதிர்க்கட்சி தலைவரின் உறுதிமொழி! வீதிக்கு வந்த மக்கள்

பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரத்தில் பெற்றுத் தருவதாக எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய உறுதிமொழி நிறைவேறாது போயுள்ளது.
இந்நிலையில் பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று இரவு முதல் ஆரம்பித்துள்ளனா்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, கடந்த 17ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு அடுத்து இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து, ஐந்து நாட்களாக தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு 14 நாட்கள் கால வரையறை இன்றுடன், நிறைவடையும் நிலையில் பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ளாத பரவிபாஞ்சான் மக்கள் தங்களுடைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி மீண்டும் தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவா் அளித்த வாக்குறுதியின் படி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் படைத்தரப்பு ஏற்கனவே தீா்மானித்ததன்படி மூன்றரை ஏக்கர் காணியை மட்டுமே விடுவித்துள்ளனர்.
அதுவும் பொது மக்களிடம் இன்னும் கையளிக்கப்படவில்லை அரச அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பந்தன் ஐயாவின் உறுதிமொழியை நம்பி நாம் எமது போராட்டத்தை கைவிட்டிருந்தோம்.

ஆனால் அவர் கூறியபடி எதுவும் இடம்பெறவில்லை. எனவே நாம் எமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என பரவிபாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.
15 குடும்பங்களுக்கு சொந்தமான இன்னும் பத்து ஏக்கா் காணி விடுவிக்க வேண்டும். எனவே அந்தக் காணிகளும் விடுவிக்கும் வரை நாம் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila