கொலைக்குற்றவாளி ஒருவர் ஆலயத்திற்குள் செல்லக்கூடாது என தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மலேசியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிக்கு ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்குள்ள சிந்துல் பௌத்த ஆலயத்திற்குள் அவர் சென்றதாக அறிந்து மலேசிய முற்போக்கு சங்கத்தின் தலைவர் ஏ.இளங்கோவன் உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஆலயத்தின் தலைமை பிக்குவுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், இதற்காக இந்திய முற்போக்கு சங்கத்தின் தலைவர் இளங்கோவன் மன்னிப்புக் கோரியுள்ளார். மலேசியாவில் உள்ள புலம்பெர் தமிழ் சமூகத்தினரால் மஹிந்தவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில, அவருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொலைக்குற்றவாளி ஒருவர் ஆலயத்திற்குள் செல்வதா? : மலேசியாவில் வெடித்தது மஹிந்தவுக்கு எதிர்ப்பு

Add Comments