தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாக கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின்னரும் இணைந்து இன்று பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற்றது. இப் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச்சேர்ந்த 23 வயது இளைஞர் சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில், ’’காவிரியில் நீரிப்பெற்று விவசாயத்தை மீட்டெடுக்க போராடுங்கள் ‘’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தீக்குளித்தார் அவருக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
Add Comments