யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையிலான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும், யுத்தத்தால் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று சட்ட ஒழுங்கு அமைச்சுக்கு கீழ் உள்ள புலனாய்வுப்பிரிவினர் இடையூறு விளைவிக்கின்றனர் என இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.
அதிலும் குறிப்பாக கணவனை இழந்த பெண்கள் திட்டமிட்டு புலனாய்வு என்ற ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்த அவர், விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியான கேணல் கலையழகனின் மனைவி அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமையை இதன்போது சுட்டிக்காட்டினார்.
கணவனை இழந்த இவ்வாறான பெண்களை தொடர்ந்தும் விசாரணை எனும் பெயரில் வீட்டிற்கு சென்று இடையூறு விளைவிப்பதை நல்லாட்சி என்று கூறும் இவ் அரசாங்கத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன், இவ்விடயங்களை கவனத்தில் எடுத்து வடபகுதி பெண்களின் நிம்மதியான வாழ்விற்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.