மாரடைப்பால் நேற்று மரணமான வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் உடல் நேற்று மாலை முதல் முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன், லிங்கநாதன், இந்திரராசா மற்றும் பலநூற்றுக்கணக்காண மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
|