மென்வலுவால் தாங்கள் சாதித்திருப்பதாக பொய் பேச சளைக்காத திரு சுமந்திரன் மீண்டும் பொய் பேசி இருக்கிறார். எல்லா விடயங்களையும் சாதித்து விட முடியாது என்பது உண்மை. ஆனால் எந்த விடயத்தில் நேர்மையாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரியளளவில்லை. மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு மென்வலு வன்வலு என வசனம் பேச வேண்டியதில்லை . உண்மையாகப் பேசினால் போதும்
1. சர்வதேச ரீதியாக நடந்த தரவு சேகரிப்பை ஒரு சட்டத்தரணி எந்த அடிப்படையில் சரவதேச விசராணை முடிந்து விட்டது என பொய் சொல்லி மக்களை ஏமாற்றியது தான் மென்வலுவா ?
2. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்கிற விடயத்தை அரசாங்கம் தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் அதனை ரகசியமாக சிங்கப்பூரில் வைத்து ஒப்பு கொண்டு விட்டு எந்த அடிப்படையில் சமஸ்டிக்கு வாக்கு கேட்டார்கள் ? ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி ஒற்றையாட்சியை கடந்து வர சம்பாதித்தார் என சொன்ன பொய் தான் மென்வலுவா ?
3. கடந்த ஆண்டு கார்த்திகை 7 ஆம் திகதிக்கு முன் சிறை கைதிகள் விடுவிக்க படுவார்கள் என சொல்லி ஒரு வருஷம் போய் விட்டது ..இது தான் மென்வலுவா ?
4. திருகோணமலை அம்பாறை மட்டக்களப்பு , வடக்கின் எல்லா மாவட்ட்ங்களிலும் அபகரிப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது .புத்தர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் . மணலாறு முற்றாக அபகரிக்கப்பட்டு உள்ளது .. நெடுங்கேணி போன்ற பகுதிகள் தெளிவாக ஆக்கிரமிக்கபட்டு வருகின்றன ..கிழக்கின் எல்லை கிராமங்கள் பறி போய் விட்டன திருகோணேஸ்வரம் , கந்தளாய் வெந்நீர் ஊற்று என சகல இடங்களும் திட்டமிடப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது ..இதை எல்லாம் பாராளுமன்றில் கூட தெளிவாக பேசாமல் கடந்து போனது தான் மென்வலுவா ?
5. வீடமைப்பு திடடம் மீண்டும் பொருத்து வீடு என அரசு சொல்லி விட்டது. குறைந்த பட்சம் இந்த விடயத்தில் கூட நேர்மையாக செயல்பட முடிய வில்லை ..இது தான் மென்வலுவா ? வவுனியா பொருளாதார வலயத்தில் மக்கள் நலன் சார்ந்து செயல்படாமல் இருந்தது தான் மென்வலுவா ?
6. தேர்தலில் வாக்குறுதி வழங்க பட்ட தொழில் வாய்ப்பு , உட்கட்டுமானம் , சுகாதார திட்டங்கள் , நீர்நிலைகள் என எந்த ஒரு விடயத்தில் குறைந்த பட்சம் ஒரு செயல்முறை வரைய பட்டுள்ளது ?
7. காணாமல் போனோர் விவகாரத்தில் , திருகோணமலை போன்ற இடங்களில் இருந்த ரகசிய முகாம் விடயங்களை ஐ நா அம்பல படுத்திய பொது அரசுக்கு சார்பாக கடந்து போக செய்தது தான் மென்வலுவா ? டக்ளஸ் உட்பட்ட பலருக்கும் எதிராக மக்கள் தெளிவாக அரச ஆணைக்குழுவில் வாக்குமூலம் கொடுத்தும் இதுவரை அமைதியாக இருப்பது தான் மென்வலுவா ?
8. கிளிநொச்சி உட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து காணி பறிப்புகள் நடக்கிறது .. இதை அந்த மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களே சொல்லுகிறார்கள் . இதை எல்லாம் கேட்காமல் இருப்பது தன மென்வலுவா ? கிளிநொச்சி , முல்லைத்தீவு பகுதிகளில் காணி விடுவிப்பு தொடர்பாக பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு அமைதியாக இருப்பது தான் மென்வலுவா ?
9. இதுவரை மக்கள் நலன் சார்ந்து வரையப்பட்ட ஒரே ஒரு பொருளாதார திட்டம் சொல்லுங்கள் ?
இது வெறும் சாம்பிள் தான் .இந்த விவகாரங்கள் பற்றி எல்லாம் பேச கட்சி உறுப்பினர்கள் முன் வர வேண்டும் ..மக்களுக்காக தான் அரசியல் ..