வவுனியா பொங்குதமிழ் தூபியில் வவுனியாபிரஜைகள்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.05 மணிக்கு இடம்பெற்றது.
மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகளே இவ்வாறு கண்ணீர் விட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாகாண சபை உறுப்பினர் எம். தியாகராசா மற்றும் காணாமல்போனோரின் உறவுகளின் சங்கத்தலைவி ஆகியோர் தூபிக்கு மலர்மாலை அணிவித்திருந்ததுடுன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரஜைகள் குழுவின் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் ஈகைச்சுடரை ஏற்றியிருந்தனர்.
இந் நிலையில் மாவீரர்களின் உறவுகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தியிருந்தனர்.
இதன்போது அங்கு குழுமியிருந்த மாவீரர்களின் உறவுகள் கதறி அழுதமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.