கடந்த தீபாவளி தினத்தில் இரண்டு சமூகங்களுக்கு இடையில் பிரச்சினைகள் உருவெடுத்திருந்த நிலையிலேயே சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், அன்றைய தினம் சிலர் மது போதையில் பூந்தோட்டம் பகுதியில் கை கலப்பில் ஈடுபட்டதன் எதிரொலியாகவும் பூந்தோட்ட மக்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகையில்,
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலைக்கு வருபவர்கள் மது அருந்தி விட்டு கிராமங்களில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றனர். இது மக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது.
வவுனியாவின் பூந்தோட்டத்தில் மாத்திரமல்ல கிராமப் புறங்களிலும் மதுபான சாலைகள் அதிகரித்து வருகிறது. ஆகவே கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபான சாலைகளை மூட வேண்டும். மதுபான சாலைகள் சில நேரங்களில் இன ஐக்கியத்திற்கும் இடையூறாக செயல்படுவதினால் அவைகள் மூடப்பட வேண்டும்.
குறிப்பிட்ட மதுபானசாலையை அகற்றுவதற்காக கிராம மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும். அது ஜனாதிபதி மட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளாது விட்டால் மக்களை அணி திரட்டி போராட்டம் ஒன்று நடத்தப்படும் என தெரிவித்தனர்.