மட்டக்களப்பை பொதுபலசேனா முற்றுகையிட்டதால் பதற்ற நிலை! கலகத்தடுப்பு பொலிஸார் குவிப்பு

பொதுபலசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மட்டக்களப்பிற்கு வருகைத்தந்துள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (03) காலை முதல் மட்டக்களப்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து வாகனங்களில் மட்டக்களப்பு நோக்கி பொலன்னறுவை வழியாக பயணித்த பொது பல சேனா அமைப்பினர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான ரிதிதென்னவில் தடுக்கப்பட்ட போது பொலிஸாரின் தடையையும் மீறி அவர்கள் செல்ல முற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை பொதுபல சேனா அமைப்பினர் மட்டக்களப்பு நகருக்கு உள்நுழைய முயற்சித்த போது பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளனர்.
பொது பல சேனா அமைப்பின் வருகையினைத் தடுக்கும் முகமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் அதிகளவான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் கலகத்தடுப்பு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொதுபல சேனா அமைப்பினர் பல வழிகளில் மட்டக்களப்பு நகருக்கு உள்நுழைய முயற்சித்த போதும் பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அமைப்பினர் ஐந்து பஸ்களில் வருகைத்தந்துள்ளதாகவும் அவர்களை தடுக்கும் முகமாக நீதி மன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.


இதேவேளை, அவர்கள் மாற்று வழியினுடாக மீண்டும் உள்நுழைய முயற்சி செய்துள்ளனர், இருப்பினும் இதனையும் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
இதையடுத்து கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பொது மக்கள் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.
மேலும், மக்களின் உணர்வுகளை சீண்டி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பினர் முயற்சிக்கலாம் இதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டு மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகையிரத சேவை முடக்கம்..
சற்று முன் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதேவளை, தடுக்கப்பட்ட புகையிரதம் திருப்பபட்டுள்ளதுடன் கொழும்பு இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற புகையிரதத்தை தடுக்க முற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


















Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila