வடக்கு சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமோன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரது படத்தை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் விசமிகள் என்று கூறியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வைகையிலேயே, இன்றைய இந்த போராட்டம் நடத்தப்படுபதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
“புலம்பெயர் தமிழர்களே காசு கறக்க கனடா வரும் சுகாதார அமைச்சரிடம் ஜாக்கிரதை, செத்த பிணங்கள் எங்களை பார்த்து விசமிகள் என்று கூறுவதா?, ஊழல் விசாரணை கமிட்டியில் ஆஜர் ஆகி முதலில் உன்னை யோக்கியம் என்று நிரூபி” என பல்வேறு பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ஒரு மணித்தியாளம் வரை நீடித்திருந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
vavuniya-protest-01 vavuniya-protest-02 vavuniya-protest-03 vavuniya-protest-04 vavuniya-protest-05 vavuniya-protest-06 vavuniya-protest-07  vavuniya-protest-09
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila