பிரபாகரனின் பாதையில் வடக்கு அரசியல்வாதிகள் ஜாதிக யஹல உறுமய குற்றச்சாட்டு


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயணித்த பாதையில் வட க்கு அரசியல்வாதிகள் பயணிப்பதாக ஜாதிக யஹல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. வட மாகாணசபையும் வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் நாட்டில் குழப்ப த்தை ஏற்படுத்துவதாக ஜாதிக யஹல உறுமயவின் பிரதித் தலைவரும் ஊடகத்துறை பிரதியமைச்சருமான கருணாசேன பரணவிதான தெரிவித்துள்ளார்.

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பயணித்த அதே பாதையிலேயே பயணிப்ப தற்கு வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் மாகாண சபையும் பயணித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது.
தேசியக் கொடியை நிராகரித்த வட மாகாண சபை கல்வியமைச்சர் சர்வேஸ்வ ரன் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இனியும் மௌனமாக இருக்கக்கூடாது என வும் அக்கட்சியின் பிரதித் தலைவரும், ஊடக த்துறை பிரதியமைச்சருமான கருணாசேன பரணவிதான தெரிவித்தார்.

அண்மையில் வவுனியா-இரட்டைப் பெரிய குளம் பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமை ச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்று வதற்கு நிராகரித்துவிட்டார்.
இந்த செயற்பாடு தொடர்பில் தென்னிலங் கையைச் சேர்ந்த கடும்போக்குவாதிகளும்  அரசியல் வாதிகளும் கடும் கண்டனம் வெளி யிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாதிக ஹெல உறுமய ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர், தேசியக் கொடியை அவமதித்த வடக்கு கல்வி யமைச்சர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.   
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila