இந்து ஆலயங்கள் மீது மீண்டும் தாக்குதல்கள்


அடையாளந் தெரியாத நபர்களினால் கிழக்கில் உள்ள இந்து ஆலயமொன்றின் விக்கிரகம் தூக்கி வீசப்பட்டதுடன் மற்றுமோர் ஆலயத்தின் கோபுர கலசமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது இத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

கூழாவடி பிள்ளையார் ஆலயத்தில் மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையாரை அகற்றிய இந் நபர்கள் அதனை அருகாமையிலுள்ள காணியொன்றுக்குள் வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வழமை போல் ஆலய பணிக்கும் வழிபாட்டுக்கும் சென்றிருந்த பெண்ணொருவர், இது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மற்றுமோர் சம்பவத்தில் பத்தினி அம்மன் ஆலயம் மீதான தாக்குதலின் போது ஆலயத்தின் கோபுர கலசம் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை பொறுத்தவரை தமது பகுதியில் இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பின்னணியில் நடைபெற்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதியன்று மட்டக்களப்பில் நடைபெற்ற இது போன்ற சம்பவமொன்றின் போது வாகனேரி ஸ்ரீசத்தி விநாயகர் ஆலயமும் தாக்கப்பட்டு பிள்ளையார் சிலை தகர்க்கப்பட்டும் உடைக்கப்பட்டும் உடைமைகள் சேதமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila