முன்னாள் போராளி கொலை செய்தே தூக்கிலிடப்படார்-பரபரப்பு வாக்குமூலம்


முன்னாள் போராளியும் ஜனநாயகப்போராளிகள்
கட்சியின் தென்மராட்சி  அமைப்பாளருமான இனியவன் கொலைசெய்யப்பட்டே தூக்கிலிடப்பட்டதாக அவரது நண்பர் வாக்குமூலமளித்துள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தை சமூக வலைத்தளம்மூலம் தெரிவித்துள்ளதோடு அந்த கொலையாளிகளை தனக்கு தெரியும் எனவும் அதனை தான் விரைவில் அம்பலப்படுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த போராளிக்கு ஐந்து பிள்ளைகள் என்பதோடு கடைசிப்பிள்ளை பிறந்து ஐந்து நாட்களே ஆகியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதானது


💥💥அனைவருக்கும் வணக்கம்💥💥




.............................
.........................................
வீர மரணம் அடைந்த எமது விடுதலைப்புலி போராளி இனியவன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை பிராத்தித்துக்கொண்டு உறவுகள் உங்களோடு சில விடயங்களை பகிர்கின்றேன்.
.......................................................................
அண்ணா இனியவன் .............
எமது தேசிய தலைவர் அவர்கள் காட்டிய பாதையிலே,வீரத்திலே,சிறந்த மனிதநேயத்திலே, மாவீரர் குடும்பங்கள்,போராளி குடும்பங்கள்,மாற்றுத்திறணாளிகள், மற்றும் அடைக்கலம் இல்லாத உறவுகளுக்கு ஒரு சகோதரனாயும் மரணிக்கும் வரை தேசிய தலைவரின் இலட்சியப் பாதையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இனியவன் அண்ணா தற்கொலை செய்யவில்லை என்பதே அசைக்க முடியாத உண்மை .
💥💥இது திட்டமிட்ட படுகொலையே........ ஆயிரம் ஆயிரம் மடங்கு தற்கொலையென உலகம் நம்பும்படி தடயம் எதுவும் இல்லாமல் கச்சிதமாக இந்த கொலையை சில தரப்பினர் செய்து முடித்திருக்கின்றார்கள்.
இது கொலை என சந்தேகம் என்று கூறி குடும்பத்தினர் வைத்தியசாலை பிரேத பரிசோதனை வைத்தியரிடமும் ,பொலீசாரிடமும் தெரிவித்து இருந்தும் சில மணி நேரங்களிலேயே அண்ணாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
💥💥இது எல்லாம் ஒரு புறம் இருக்க நள்ளிரவு வீட்டுக்கு வந்த பூதவுடல் இன்று காலை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் வருவதற்கு முன்பே அவசரம் அவசரமாக எடுக்கப்பட்டிருந்தது வீட்டாரின் மன நிலைக்கு ஏற்ப அப்படியே உடன் அடக்கம் செய்ய ஆயத்தமானோம் . இதிலும் பல காரணங்கள் இருக்கின்றன இதனால் அதை இப்போது நான் கூற விரும்பவில்லை.
மேலும் இப்போது நான் ஒன்றைக்கூறுகின்றேன்...........................

💥💥இனியவன் அண்ணா ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் யாழ் தென்மராச்சிப் பகுதியின் அமைப்பாளராகவும் இருந்து வந்த வேளையில் என்னுடன் நல்ல சகோதரனாகவும் , நல்ல நண்பராகவும் வீர மரணம் அடைவதற்கு முதல்நாள் வரை இருந்துள்ளார் இனியும் இனியவன் அண்ணா நான் மரணிக்கும் வரை என் மனதில் என்றும் வாழ்வார் என் மரணம் இதை விட மோசமாக இருக்கும் என்று எனக்கு தெரியும் இதற்கு நான் அஞ்ச வில்லை இருப்பினும் அது இப்போது எனக்கு இல்லை என்றும் உறுதியாக சொல்கின்றேன் காரணம் என் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையாக கூட இருக்கலாம்..............


எனவே இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது இந்த கொலை தகவலை தெரிந்தவர்கள் எனது முகநூல் நட்பு வட்டத்திலே இருப்பதாக நான் நம்புகிறேன் அவர்களின் பார்வைக்காக கூட இந்த சிறப்பு பதிவை கூட நான் பதிவிடுவதாகவும் இருக்கலாம் நிச்சயம் எனது இந்த பதிவு அவர்களை சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
💥💥இனியவன் அண்ணாவின் வீர மரணத்திற்கு யாரும் பொறுப்பு கூற தேவையில்லை அதை நாங்களும் குறிப்பாக நானும் விரும்பவில்லை ஏனேனில் சம்மந்தபட்டவர்களை நான் விரைவில் உறுதிப்படுத்திக்கொள்வேன் இருப்பினும் நான் யாரிடமும் இது தொடர்பாக முறையிடவோ, சம்மந்த பட்டவர்களிடம் நேரடியாகவோ இப்போது கூற போவது இல்லை. காரணம் இவர்களுக்கு உரிய தண்டனையை நானே காலம் கூடி வரும் போது வழங்குவேன் என்பது உறுதி முடிந்தால் அதற்குள் என்னையும் தடயம் இல்லாமல் செய்யப்பாருங்கள்.
இறுதியாக ஒன்றை அரச ஒட்டுக்குழுக்களுக்கும், எமது காட்டி கொடுக்கும் துரோகிகளுக்கும் கூறி வைக்க விரும்புகின்றேன்.
💥💥தமிழிழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படவும் இல்லை பிற்பட்ட காலத்தாலும் அழிக்கவும் முடியாது காரணம் விடுதலைப் புலிகள் வேற்றுக்கிரக வாசிகளோ அல்லது நிலத்துக்கு அடியில் இருந்து வந்தவர்களோ இல்லை வானத்தில் இருந்து குதித்தவர்களும் இல்லை இனிமேலும் குதிக்கப் போறவர்களும் இல்லை தமிழ் மக்கள் தான் விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்கள் மக்களாகிய நாங்களும் உங்களுடன் தான் வாழ்கிறோம் .இப்போது காலத்தின் தேவை மௌனிக்கப்பட்டுள்ளது தேவைகள் பலவிதம் எப்போது அந்த தேவைகள் அர்த்தமற்று போகின்றதோ அப்போது நாம் ஆயுதம் ஏந்துவோம் இதுவே உண்மையும் நியதியுமாகும்.
💥💥அந்த ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் இப்படியான சம்பவங்கள் மூலம் அதாவது இனியவன் அண்ணா படுகொலை, தங்கை வித்தியா கொடுர படுகொலை, பல்களைக்கழக தம்பிமார் படுகொலை போன்றவற்றின் மூலம் நீங்களே ஏற்படுத்தித் தருகின்றீர்கள் அதற்கு அரச புலனாய்வு, மற்றும் ஒட்டுக்குழு , துரோகிக்குழு போன்றோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் ...............................
💥💥அண்ணாவின் ஜந்து அழகிய குழந்தைகளின் கல்விக்கு நாம் அனைவரும் உதவுவது எமது தார்மீக உரிமையும் கடமையுமாகும் .
கொலையாளிகள் ஒருவேளை இந்த குழந்தைகளை பார்த்திருந்தால் இவ்வாறு செய்திருக்கமாட்டார்கள் என ஒரு சிறிய நம்பிக்கை . அண்ணாவின் கடைசி குழந்தை பிறந்து இன்றுடன் ஜம்பது நாள் என்றதால் புகைப்படம் பிரசுரிக்க வில்லை.

இந்த பதிவு எனது தனிப்பட்ட ஒரு பதிவே.
உங்கள் மீள் பதிவுகள் தேவையில்லை.
நன்றி.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila