அப்படித்தான் தொலைந்து போன உறவுகளைத் தேடும் படலமும் தற்போது இலங்கைத் தமிழர்களிடம் தீவிரம் அடைந்து புலம்பிக் கொண்டு இருக்கின்றது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இதன் சோகம் என்னவெனில் காணாமல் போனது இவர்களால் தான், காரணம் இன்றி பலவந்தமாக காணாமல் அல்ல கடத்தப்பட்டார்கள் என்று தெரிந்து மக்கள் போராடுகின்றனர். இதற்கான தீர்வு முறையான நீதியினால் கிடைக்கும் ஆனால் கொடுப்பதில் தான் தாமதம்.
அது சரி கொடுப்பதற்கு மனம் வேண்டும். அப்படியே மனம் இருந்தாலும் அதனால் கிடைக்கக் கூடிய இலாபங்கள் மிக மிக முக்கியம். இதன் அர்த்தம் நறுக்கென்று புரியும் நல்ல அரசியல் வாதிகளுக்கு.
என்னதான் இருந்தாலும் வரலாற்றிலும் சரி, இப்போதும் சரி தமிழர்கள் வாழ்வு போராட்ட களத்திற்கு புதிதல்ல என்றாலும் நீதி மட்டும் அன்று முதல் இன்று வரை எட்டான் கனியாகவே இருக்கின்றது.
அப்படி பார்க்கும் போது நவீன காலத்தில் போராட்டங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டு கொண்டு வருகின்றது.
மக்களின் பிரச்சனைகளை மட்டும் மையமாகக் கொண்டு சுயம்பாக அதிலும் குறிப்பாக அரசியல் சுயலாபமற்ற போராட்டங்கள் உருவாகி உக்கிரமடையும் போது.,
அவை சமூக வலைத்தளம் அல்லது செய்திகள், முகப்புத்தகத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிடாமல் வெற்றி பெற்றுள்ளது என்பதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.
இப்படியாக சுயம்பாக வெடிக்கும் போராட்டங்களில் பாதி புலம்பல், பாதி வசை, சில கடந்த காலத்தின் எதிரொலிப்பு, இன்னும் பல எதிர்காலம் பற்றிய அச்சுறுத்தல் கொண்டதால் தீர்வைத் தேடி பதிலைத் தா என ஒரு இணைந்த மக்களின் குரல்களாகும்.
அதே வகையில் தான் இலங்கையிலும் யுத்தம் நிறைவு பெற்ற நாள் முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களோடு அடிப்படை உரிமைகளின் போராட்டங்களும் அலைகளாக தொடர்ந்து மோதிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் நீதி மட்டும் அல்ல அனுசரிக்கும் அரசியல் தரப்பும் கூட இங்கு குறைவு. இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி மட்டும் அல்ல இலங்கை யுத்தத்தில் இடம் பெற்ற போர்க் குற்றத்தின் நீதிக்கும் இதே கதிதான்.
ஃபிடல் காஸ்ட்ரோ போராட்டங்கள் பற்றி “புரட்சி என்பது ரோஜாக்களால் ஆன மெத்தை அல்ல. அது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையேயான போராட்டம்” என அழகாக கூறியுள்ளார்.
அவர் வழி இன்றும் தமிழர்களிடம் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத விடயம் தான். ஆனாலும் இதன் அர்த்தம் உணர்ந்து போராட்டங்கள் எழுந்த போதும் கூட, அந்த போராட்டங்களின் நவீன வடிவம் மற்றும் வரலாற்றின் முன்னேற்றத்தை புரிந்துகொள்ளும் திறன்.,
போன்றவை மட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற காரணத்தால் அந்த போராட்டத்தின் விளைவும், தீர்வும் இறுதியில் பரிகசிக்கத்தக்கதாக மாற்றமடைந்து விடுமா என்ற பயமும் கூடவே தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
அல்லது போராட்ட இனத்தில் காணப்படலாம். இதுவே இன்றும் தொடர்கின்றது தமிழர்களிடையே. அதனால் தீர்வும் நீதியும் எப்போதும் ரசிப்பும் உணர்வும் மட்டும் கொடுக்கக் கூடிய தள்ளிப்போகும் வானவில் போன்று மாறிச் செல்கின்றது.
அதனால் எப்போதும் கையில் வருவதில்லை. ஆனாலும் எதிர்பார்ப்புகள் மட்டும் குறைவில்லை, நம்பிக்கைகள் குறைய வில்லை. இவை இருக்கும் மட்டும் என்றாவது நிச்சயம் நீதி கிடைக்கும் என்பது நிச்சயம்.
எது எப்படி வேண்டுமானாலும் போகட்டும் தமிழர்களின் போராட்டம் சிறிது சிறிதாக, ஒவ்வொரு ஒவ்வொரு பிரச்சனையாக மையப்படுத்தி பிரதேச ரீதியாக தொடர்ந்து வெடித்து வருகின்றன.
இத்தகைய போராட்டங்கள் ஒன்றிணைத்து ஒரு பெரும் போராட்டமாக வெளிப்படுத்துகையில் வெளிவரும் மக்களின் சக்தியின் அளவு அபரீமிதமானது. அந்த மக்களின் குரல், எதிர்ப்பு நிச்சயம் பாரதூரமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
அப்படி சிந்தித்துப் பார்க்கும் போது சில வேளைகளின் தமிழர்களின் போராட்டங்களும் கூட காற்று அடைக்கப்பட்டு வரும் பலூனாக அரசியல் தலைமைகள் பார்த்தால் காலத்தின் பதில் வேறு வகையாக மாற்றம் அடையும்.
இந்தக் கருத்தை அதிகமாக தற்போது முன்வைத்து வருகின்றனர் தென்னிலங்கை புத்திஜு விகள். காரணம் நிதானிப்புகளுக்கும் அமைதிக்கும் மட்டுமல்ல குறிப்பிட்ட எதற்கும் காலம் ஒரு நாள் பதில் கூறிவிடும். அப்போது கிடைக்கும் பதில்களின் விளைவு அடக்கப்பட்ட உணர்வுகளாக வெளிவரும்.
இப்போதைக்கு ஒரு கேள்வி அப்படியாயின் அவ்வாறான ஒரு ஒருங்கிணைந்த போராட்டவடிவத்தினை ஒருங்கிணைப்பது யார்?
இந்தக் கேள்வி நியாயமானது தான் இருந்தாலும் இதற்கான விடை மட்டும் எதிர்பார்ப்போடு தொக்கி நிற்கிறது அன்று முதல் இன்று வரை.
அப்படியே தீர்வு வேண்டி தமிழர்களிடம் ஒரு ஒருங்கிணைப்பினை மேற்கொள்வது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளா?
அல்லது ஒரு தனி நபரா? இல்லை மக்கள் அமைப்புக்களா? என்பதிலும் கூட சிக்கல் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் அப்போது முதல் இப்போது வரை அரசியல் என்றாலே சாக்கடை என்ற கண்ணோட்டம் ஆழ வேர் விட்டு விட்டது.
ஆனால் எதிர்காலத்தில் தமிழர்களின் தேவை பற்றி சிந்திக்கும் போது, இப்போதைய நிலையில் இடியாப்பச் சிக்கல் தான் போலும்.
அப்படியே ஒரு ஒருங்கிணைப்பு நடக்கின்றது எனும் போது அங்கு சிறந்த ஆளுமை, அரசியல் ஞானம் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை தற்போது தமிழர்களின் பிரச்சனையின் உக்கிரம் அறியத்தந்துள்ளது.
நிற்க இந்த இடத்தில் மீண்டும் ஒரு சிக்கல் சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதில் எமக்குரிய பங்கு என்ன என்பது விவாதத்திற்கு உள்ளாகிப் போகின்றது.
எப்படியானாலும் துயரை உண்டு வடுக்களைப் பருகிக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்வுக்கு தீர்வு கொடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இது இலங்கை அரசியல் தலைமைகள் மட்டும் அல்ல சர்வதேசத்திற்கும் உரிய கடமை என்பதை உணரும் போது போராட்டங்கள் குறைவடையும், அதுவரை காலச்சக்கரத்தை பார்த்திருப்போம்.