
சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
68ஆவது பிறந்தநாள் இன்று கொழும்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில் இலங்கை ஜெனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முக்கிய பல அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதோடு த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோரும் யாழ்பாணத்திலிருந்து சென்று தமது விசுவாசத்தை வழமைபோல காட்டியிருக்கின்றனர்.
இன்றுவரை தாயகத்தில் நடைபெற்றுவரும் நிலவிடுவிப்பு போராட்டங்களிலோ அல்லது காணாமல் போன உறவுகள் மேற்கொள்ளும் போராட்டங்களிலோ ஒருமுறையேனும் கலந்துகொள்ளாத அரசியல் தலைவர்கள் அதே படுகொலைகளுக்கும் காணாமல் போதல்களுக்கும் பதிலளிக்காதிருக்கும் ரணிலின் பிறந்தநாள் நிகழ்விற்கு இங்கிருந்து கொழும்புக்கு சென்று கலந்துகொண்டுள்ளமை தமிழ் மக்களிடையே மேலும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது.