கடந்த புதன்கிழமை இந்தியக் கடற்படையின் வேவுவிமானமான டீயு-24 விமானம் சேவையில் இருந்து விடுவிக்கப்படுவதை முன்னிட்டு வேலூர், அரக்கோணத்தில் பிரியாவிடை வைபவம் ஒன்று நடைபெற்றது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இதில் பிரதம அதிதியாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை நிறுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் இலங்கை அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இருதரப்பினரும் கூட்டாக இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும்.
இலங்கைக் கடற்பரப்பில் சீனக்கப்பல்கள் மற்றும் படகுகளின் நடமாட்டம் பரவலாக இருக்கின்றது. கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.