இலங்கையில் இந்து மதம் அழிவதற்கு இன்னும் கனகாலம் இல்லை


இந்து கலாசார அமைச்சின் பிரதி அமைச் சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நிய மிக்கப்பட்டுள்ளார் எனும்போது இதைவிட்ட கிரந்தம் வேறு எதுவும் இல்லை எனலாம்.

இந்து சமயத்துக்கான பிரதி அமைச்சராக மஸ்தானை நியமிக்கின்றவர்கள் தங்கள் பெளத்த மதத்துக்கு மஸ்தானைப் பிரதி அமைச் சராக நியமிப்பார்களா? அல்லது கத்தோலிக்க மதத்துக்கு ஒரு இஸ்லாமியரை பிரதி அமைச்ச ராக நியமிக்க முடியுமா?
சரி, இதைத்தான் செய்ய முடியாது என் றால், இஸ்லாமிய சமயத்துக்குப் பொறுப்பான பிரதி அமைச்சராக இஸ்லாமியர் தவிர்ந்த வேறு எந்தச் சமயம் சார்ந்தவரையேனும் நிய மிக்க முடியுமா? 

ஆக, எல்லோரும் ஏறி இருந்து சவாரி செய் யக்கூடிய மதமாக இந்து சமயம் இருப்பதால், இஸ்லாமியர் ஒருவரை இந்து கலாசார பிரதி அமைச்சராக இலங்கை அரசு நியமித்துள்ளது.

சிவபூமி என்று திருமூலரால் போற்றப்பட்ட இலங்கைத் தீவு சிவபக்தனாகிய இராவண னால் ஆளப்பட்டது.
ஆனால் இன்று இந்து மதத்தை அழித்து ஒழிப்பதற்கு ஏகப்பட்ட சதித் திட்டங்கள் நடக் கின்றன.

மத மாற்றம் என்ற பெயரில் கூலிப்படைகள் இந்து சமயத்தவர்களைத் தத்தம் சமயத்துக்கு இழுக்கின்றனர்.
இதுதவிர, இந்து ஆலயங்களுக்கு அரு கில் தத்தம் வழிபாட்டு நிலையங்களை அமைப் பதிலும் பிற சமயங்கள் அதீத தீவிரம் காட்டு கின்றன.
நிலைமை இதுவாக இருக்கையில், இந்து சமய அமைப்புக்கள் ஏனோதானோ என்ற நிலைப்பாட்டில் இருப்பதையும் இங்கு கூறித் தானாக வேண்டும்.

மாட்டிறைச்சிக் கடைகளை ஆதரித்து அதற் காகக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் நம் இந்து சமயத்தில் இருக்கும்போது இந்து சம யம் உய்வு பெறுவதென்பது முடியாத காரியமே.
எதுஎவ்வாறாயினும் கிழக்கு மாகாணத் தில் இந்து சமயத்தவர்கள் இஸ்லாமிய மதத் துக்கு மாற்றப்படுகின்றனர்.
தென்பகுதியில் இருந்து வெளிவரும் தமிழ்ப்  பத்திரிகை ஒன்றில் ஒவ்வொரு நாளும் மதம் மாறுதல் பற்றிய விளம்பரம் வந்த வண்ணமுள்ளது.

இதுபற்றி சரியான ஆய்வு செய்யப்பட்டால், கிழக்கு மாகாணத்தில் இந்து சமயத்தவர் களை முஸ்லிம் மக்கள் ஏதோவொரு வகை யில் மதமாற்றம் செய்கின்றனர் என்பது தெரிய வரும்.
இவ்வாறு இடம்பெறும் மதமாற்றத்தை மேலும் துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவர் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என அனுமானிப்பதில் தவறில்லை.
என்ன செய்வது, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இந்து சமயத்துக்கு அறவே இட மில்லை எனும்போது இந்து சமயத்துக்கான பிரதி அமைச்சராக மஸ்தான் இருந்தால் என்ன? மரிக்கார் இருந்தால் என்ன? என்பதே நிலைமை.

எதுவாயினும் இந்து கலாசார பிரதி அமைச் சுப் பதவி எனக்கு வேண்டாம் என்று மஸ்தான் கூறியிருந்தால் அது அவருக்கு பெருமை யைக் கொடுத்திருக்கும் என்பதை மட்டுமே இப்போதைக்கு கூறமுடியும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila