போதையில் தடுமாறும் சிங்கலே அமைப்பின் தலைவர்

நாட்டில் பௌத்தம் அழிந்து வருகின்றது அதனை காப்பாற்ற வேண்டும் என்ற வகையில் செயற்பட்டு வரும் அமைப்பு சிங்கலே என்ற அமைப்பாகும்.
அந்த அமைப்பின் பிரதானமான நபரே அதன் தலைவர் சாலிய எனப்படுபவர். இவர் பிக்குகளுடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். இனவாதத்தை பரப்புகின்றவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
மேலும் சிங்கலே அமைப்பிற்கு நிதி சேகரிப்பது, உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது என பலவகையான செயற்பாடுகளை செய்து வருபவர்.
பௌத்தத்தை காக்கும் இவரது நடவடிக்கைகள் போலியானவை எனவும் இவர் ஒரு கைக்கூலி எனவும் கூறும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
சிங்கலே அமைப்பின் தலைவரின் உண்மை முகம் அம்பலம் என சிங்கலே அமைப்பில் இருந்த ஒருவர் மூலமாக வெளியிடப்பட்டுள்ள குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்கலே அமைப்பின் தலைவர் சாலிய போதைக்கு அடிமையானவர். தனிப்பட்ட இலாபங்களுக்காக மட்டும் செயற்படுபவர்.
அவர் உண்மையில் பௌத்தத்திற்காக செயற்படுபவர் அல்ல. இன்றைய நிலையில் மக்களை ஏமாற்றி திசை திருப்பிக் கொண்டு வரும் நபர்.
போதை மற்றும் தகாத பழக்கவழக்கங்களையும் கொண்ட அவரை மக்கள் நம்ப வேண்டாம். என்னையும் குடிக்குமாறு பலவந்தப்படுத்தியவர் அவர்.
பௌத்தம் என்ற பெயரில் அந்த சிங்கலே அமைப்பில் சேர்த்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வை சீரழித்துக் கொண்டு வருபவர் சாலிய.
எனவே இந்த சாலிய தொடர்பிலும், சிங்கலே அமைப்பு தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காணொளியில் சாலிய குடிபோதையில் இருக்கும் காணொளியும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila