காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் வாயை திறந்தால் அரசுக்கு சிக்கல்! - சி.வி


காணாமலாக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தோம், கொன்றோம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று படையினரோ அரசாங்கமோ கூறினால்  பாரதூரமான குற்றம் நடந்தேறியமை உறுதியாகும். அதனால் குற்றமிழைத்தவர்களுக்கு என்ன நடக்கும் என்பதும் தெரியும். இந்நிலையிலேயே அரசாங்கம் இவ்விடயத்தில் பதில்கூறாது இருக்கிறது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.       

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று நாற்பத்து நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மக்களை சந்தித்த வடமாகான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மக்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள், இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் என தமது உறவுகள் தொட ர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன் னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் கருத்துக்களை கேட்டு அங்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுடையவை வெறுமனே காணாமல் போனோர் என்று கூறாது இந்த இடத்தில் கண்டோம் அந்த இடத்தில் கண்டோம் என ஆதாரபூர்வமாக கூறும் கருத்துக்கள் விசாரணைக்கு பயனுடையதாக அமையும். இவற்றை எழுத்து மூலம் தாருங்கள் அதை பயனுள்ளதாக்குவோம்.

 எனினும் தொடர்ந்து ஒரு விடயத்தை நீங்கள் மறக்ககூடாது தூங்கி கொண்டிருக்கிறவனை எழுப்பலாம்.
பாசாங்கு செய்யிறவனை எழுப்பமுடியாது,  எங்களுக்கு அது செய்யிறம்.
இது செய்யிறம் என்று கூறும் அரசு உண்மையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை மேற்கொண்டால் எமக்கு பிரச்சினையில்லை. 

ஆனால் நடத்த போகிறோம் நடத்தவுள்ளோம் என்று நடத்தாமலிருக்க காரணம்  குற்றமிழைத்தவர்கள் எங்கட ஆக்கள் அவர்களை எவ்வாறு காட்டிக்கொடுப்பது என்பதே அங்குள்ள பல அரசியல்வாதிகளின் நிலை ஆனால் பலமான நெருக்குதல்களால்  இந் நிலைமையை மாற்றியமைக்க  செய்யமுடியும்.

அதனைத்தான் இப்போது செய்து வருகிறோம் இது இலகுவான விடயமல்ல. ஏனெனில் நாங்கள் பிடித்தோம், கொன்றோம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் அது பாரதூரமான குற்றம் என அவர்களுக்குத் தெரியும். இதனாலேயே இழுத்தடிக்கின்றனர் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.            
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila