கேப்பாபிலவு மக்களின் நில மீட்புப் போராட்டம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை முற்பகல் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நிலமீட்புப் கவனயீர்ப்புப் போராட்டத்தை கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்திருந்தனர். அத்துடன் சமவுரிமை இயக்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் மூவினமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இப்போராட்டத்தை அடுத்து சிங்களக்க காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டதோடு நீர்த்தாரகைப் பிரயோகம் செய்யும் வாகனங்களும் வருவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் அச்சுறுத்தி விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.