சமூகத்தை சிதைத்து, வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறார்கள்: சிறீதரன் கண்டனம்

சுமூகமாக வாழ்கின்ற மக்களின் ஒற்றுமையைக் குலைத்து சமூக கட்டமைப்பை கூறுபோடுவதால் நன்மையடைய நினைக்கின்ற ஓர் குழுவின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு துணை போகும் விதத்திலேயே கரை எழில் 2016 நூலில் வெளியாகிய கட்டுரை அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தின் கலாச்சாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார விழாவின் போது கடந்த 8ம் திகதி வெளியிடப்பட்ட கரை எழில் 2016 நூலில் வெளியான கிளிநொச்சியும் மலையகத் தமிழரும் என்ற கட்டுரையினால் வரலாறுகள் திரிவு படுத்தப்பட்டு வெளியிடப்பட்டமையானது மலையக மக்கள் மற்றும் பல்வேறு தரப்புக்களிடையேயும் பல எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளன.
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தின் கலாச்சார பேரவையினால் வெளியிடப்பட்ட கரை எழில் 2016 என்ற நூலின் தமிழ் கவி என்பவரல் எழுதப்பட்டுள்ள கிளிநொச்சியும் மலையகத் தமிழரும் என்ற கட்டுரை உண்மைக்கு புறம்பானதும் ஓர் சமூகத்தை படுமோசமாக சித்தரிப்பதாகவும் அமைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமூகமாக வாழுகின்ற மக்களின் ஒற்றுமையை குலைத்து சமூக கட்டமைப்பைக் கூறுபோடுவதால் நன்மையடைய நினைக்கின்ற ஓர் குழுவின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு துணைபோவதாகவே இதனை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
இவ்வாறு வெளியாகியுள்ள இக்கட்டுரையானது இந்த மாவட்டத்தின் வளர்ச்சியையும் நன்மதிப்பையும் ஒற்றுமையையும் பெரிதும் பாதிப்படையச் செய்துவிடும்.
அதாவது மலையக மக்கள் சமூகமானது வவுனியா மன்னார் கிளிநொச்சி போன்ற இடங்களில் இடையாறாத வேலை வாய்ப்பையும் தங்கியிருக்க ஒரு கொட்டில் போட இடமும் கிடைக்காததால் இவ்விடங்களில் தங்கி விட்டனர் என்ற சொற்பிரயோகங்கள் இந்த மக்களை இழிவு படுத்தும் சொற்பிரயோகங்களாக நோக்கமுடிகின்றது.
நூலின் எட்டாம் பக்கத்தில் 3ம் பந்தியில் குறிப்பிட்டுள்ள சாந்தபுரம் என்ற கிராமத்தில் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
கப்டன் சாந்தன் என்ற மாவீரனின் பெயரில் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் மாவீரர் போராளிகளின் குடும்பங்களும் வறுமை நிலையிலிருந்த ஏனைய குடும்பங்களும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக குடியமர்த்தப்பட்டனர்.
இன்று செழிப்பாகவுள்ள இக்கிராமத்தின் உண்மைத்தன்மை மாற்றப்பட்டு இம்மக்களின் வாழ்க்கை முறை கேலி செய்யப்பட்டுள்ளமை வேதனையழிக்கின்றது.
நூலின் 8ம் பக்கத்தின் 4ம் பந்தியில் இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் இல்லாதவர்கள் அதிகளவு என பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை விதைத்து ஒரு பிரதேசத்தின் வரலாற்று நூலாக அமையும் குறித்த நூலில் இவ்வாறு தவறான கருத்துக்களையும் ஒரு சமூகத்தை கூறுபோடும் வகையிலும் வெளியிடப்பட்டிருக்கின்றமையானது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.
இது போன்ற பல எதிர்மறையான கருத்துக்களுடன் ஒர் சமூகத்தினை மையப்படுத்தி வெளி வந்திருக்கும் இக்கட்டுரையினை செம்மை பார்க்காது இந்நூலில் வெளியிடப்பட்டிருப்பது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் வரலாற்று அழிப்பின் தொடர்ச்சியாக கருத வேண்டியுள்ளது.
மாவட்டத்தில் சமூகமாக வாழ்கின்ற மக்களின் ஒற்றுமையை குலைத்து சமூக கட்டமைப்பை கூறுபோடுவதால் நன்மையடைய நினைக்கின்ற ஒரு குழுவின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு துணைபோகும் விதத்திலும் இது அமைந்துள்ளது என்று அக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுதிய குறித்த கடிதம், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்.
வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா கரைச்சிப்பிரதேச கலாச்சார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான கோ.நாகேஸ்வரன் காவேரி கலாமன்ற இயக்குனர் ரீ.எஸ்.யோசுவா ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila