தமிழரசு தலைமையினால் மறைக்கப்படும் திருமலை போராட்டம்!

suresh

கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின்; உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை வெளியுலகிற்கு கொண்டு செல்ல தமிழ் ஊடகங்கள் தவறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.ஒருபுறம் தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் இதுவரை வந்து ஆதரவு வழங்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உண்மை நிலையை வெளிவராது தடுப்பதற்கு தான் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலை ஆளுநர் அலுவலக முன்றலில் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை நேற்றையதினமான ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.suresh2
பல நாட்களாக மக்கள் அங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இங்குள்ள அரசியல் தலைமைகள் இதுவரை சென்றுகூட பார்க்கவில்லை. சம்பந்தர் ஐயா இங்கு தான் உள்ளார். ஆனால் எம்மிடம் வந்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. அத்துடன் எமது போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளிக்கொண்டு செல்ல வேண்டாம் எனவும் தடைசெய்து வருகிறார்கள். குறிப்பாக சக்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒரு முஸ்லீம்.அவர் திட்டமிட்டு போராட்டத்தை இருட்டடிப்பு செய்கின்றார்.அதே போன்று அவர்களினில் பலரும் இரா.சம்பந்தனிடம் எதோ பலாபலன்களை அடைபவர்கள் போலவுள்ளனர். யாழ்ப்பாணத்திலோ , முல்லைதீவிலோ, கிளிநொச்சி, வவுனியாவிலோ முன்னெடுக்கப்படும் போராட்டங்களை அர்ப்பணிப்புடன் அங்குள்ள ஊடகவியலாளர்கள் அறிக்கையிடுகின்றனர்.ஆனால் திருகோணமலை தமிழீழ தலைநகரமென்கின்றனர்.ஆனால் இங்குள்ள ஊடகவியலாளர்களோ நடந்து கொள்வது வேதனையளிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது எமக்கு மிகவும் இழப்புக்கள் மத்தியினில் பெரும் வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே போராட்டகாரர்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணம் முழுவதும் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இது நடக்க வேண்டிய அவசியமும் உள்ளது. காணாமல்போனோர் விபரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன். இது குறித்து கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி அழைத்துள்ளார். ஆணைக்குழு முன் மக்கள் சாட்சியம் அளித்து அறிக்கை விரைவில் வெளியிடவேண்டும் என கேட்டுள்ளோம், அதில் அனைவரின் சாட்சியம் உள்ளது. அதிலும் மேலதிக விபரம் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். பல தாய்மார்கள் தமது உறவுகளை அடையாளப்படுத்தியும் படங்கள் காட்டியுள்ளார்கள் அது தொடர்பிலும் எடுத்துக் கூறியுள்ளோம். உங்கள் போராட்டத்தை கைவிடக் கூடாது. அரசுக்கு நெருக்குதல் கொடுத்தால் மட்டும் தான் முன்னேற முடியும். வேறு எந்த நடவடிக்கையும் பலிக்காது என முதலமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே போராட்டம் பற்றி அங்கு சென்று திரும்பிய சுரேஸ்பிறேமச்சந்திரன் தகவல் தருகையினில் தமது உண்ணாவிரதப்பந்தலிற்கு போடப்பட்டுள்ள தறப்பாளிற்கு வாடகை பணம் செலுத்த முடியாது வறுமையினில் அவர்கள் உள்ளனர்.அந்த தறப்பாளை வாடகைக்கு வழங்கியவர்கள் கழற்றி சென்றுள்ளனர்.மாற்றீடாக பாடசாலையொன்றிலிருந்து ஒன்றினை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்வது கவலை தருகின்றது.ஏனைய மாவட்ட ஊடகவியலாளர்கள் இதில் கவனம் செலுத்தி தொடரும் அப்பகுதி மக்களது போராட்டத்தை,அவர்களது அவலங்களை வெளிக்கொணர முன்வரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila