இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை வடக்கு, குரு வீதி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான கிணறு ஒன்றில் இருந்து பழைய மோட்டார் சைக்
கிள்கள் இரண்டும் மோட்டார் சைக்கிள் பாகங்கள் சிலவும் நேற்றைய தினம் மீட்கப்ப ட்டுள்ளன.
இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை வடக்கு பகுதி கடந்த வருடம் நவம்பர் மாதம் பொது மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.
அப்பகுதியில் உள்ள குரு வீதி என்ற இடத்தில் உள்ள பொதுமக்கள் விடுவிக்கப்பட்ட தமது நிலங்களை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 5 பேருக்கு சொந்தமாக உள்ள பொதுக் கிணற்றினை நேற்றைய தினம் சுத்தம் செய்ய கிணற்று உரிமையாளர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
அப்போது கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருந்த போது கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் தென்பட்டுள்ளது. அப்போது உடனடியாக கிணற்றின் உரிமையாளர்கள் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை வெளியே எடுக்குமாறும் தாம் பின்னர் வருவதாகவும் கூறியுள்ளனர்.
அப்போது பொதுமக்களே குறித்த மோட் டார் சைக்கிள்கள் (கீரோ கொண்டா பசன், ரீ.வி.எஸ்) மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்களை சில கிணற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். அச்சமயம் அந்த இடத்துக்கு திடீரென இராணுவத்தினர் பலர் வந்து அங்கு நின்ற அனைவரையும் வெளியேற்றியுள்ளனர்.
அதன் பின்னரே பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் குறித்த விட யம் தொடர்பாக காணி உரிமையாளர்களை இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் இடங்கள் மற்றும் குறிப்பாக கிணறுகளில் இருந்து தொடர்சியாக பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த நிலையில்முதன் முறையாக நேற்றைய தினம் இவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்மை மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.