தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிச் சென்றபோது மக்கள் மத்தியில் ஏற்பட்ட சோகம்போல் வடமாகாண முதல்வரின் நடவடிக்கையால் வடக்கு மாகாண மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றுவரை முதல்வருக்கெதிராக சில கறுப்பாடுகள் சதிசெய்வதாக ஊடகங்களில் சுமந்திரன் ஆதரவு மாகாண சபை உறுப்பினர்களை தாக்கிய சிவஞானம் சிறிதரன், முதல்வருக்கெதிராக ஆரம்பத்திலிருந்தே குழப்பங்கள் விளைவித்த சயந்தன்- அஸ்மின் – சிவஞானம் அணியின் முதல்வருக்கெதிரான நடவடிக்கைக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களை ஒத்துழைக்குமாறு பணித்துள்ளார்.
வடமாகாணத்தில் முதல்வருக்கு ஆதரவான நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து முதல்வர் விக்கியைத் தொடர்பு கொண்ட சிறிதரன் தமிழரசுக் கட்சியில் நேற்று இணைந்த டென்னீஸ்வரன் உட்பட்ட மூன்று அமைச்சர்கள்மீதான நடவடிக்கையை இரத்துச் செய்தால் முதல்வருக்கெதிரான தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களின் நடவடிக்கையை தான் நிறுத்தவதாக தெரிவித்தாகவும் அதற்கு முதலமைச்சர் சம்மதிக்கவில்லை என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.