இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், மேலும் சில அமைப்புகளில் பிரதிநிதிகளுடன் சென்றே, அவர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்தார். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம், வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், வீதியில் தூக்கியெறியப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரது தலைமுடி, தாடி, மீசை என்பனவும் முற்றாக வழிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய பொத்தல ஜெயந்த, வெளிநாடு ஒன்றில் தஞ்சமடைந்திருந்தார். ஆட்சி மாற்றத்தை அடுத்து, தற்போது நாடு திரும்பியுள்ள அவர், நேற்றைய தினம், மேற்படி முறைப்பாட்டைப் பதிவு செய்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது, கோத்தபாய ராஜபக்ஷ தன்னை அழைத்து “நடப்பதை பார்த்துக்கொள்” எனக் கூறி அச்சுறுத்தியதாகவும் அதற்கு அடுத்த சில தினங்களில், தன்னை வெள்ளை வானில் கடத்திச் சென்றுத் தாக்கி, கை, கால்களை உடைத்ததாகவும், தன்னைக் கடத்திச் சென்று தாக்கியமைக்கான பொறுப்பை ராஜபக்ஷ அரசாங்கமே ஏற்கவேண்டும் எனவும், கடந்த 2015ஆம் ஆண்டில், ஊடகங்கள் முன்னால் பொத்தல ஜெயந்த தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அவர் நேற்று முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது |
கடத்திச் சென்று கொடுரமாகத் தாக்கினர்! - கோத்தா மீது போத்தல ஜெயந்த முறைப்பாடு
Related Post:
Add Comments