வாள்வெட்டுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து தகவல் தரக் கோரிக்கை

jaffna

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஷ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு சமூகவிரோத மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்.இந்நிலையில் இவர்களில் தேவா என்பவர் மீது சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் வாள்வெட்டு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, வேறு பொலிஸ்நிலையங்களிலும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் குறித்த நபர் உட்பட மூன்று பேரையும் கைது செய்வதற்காக விசாரனைகளையும் ஏற்பாடுகளையும் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ்நிலையங்கள் அனைத்தும் மேற்கொண்டிருந்தன.இவர்கள் தொடர்பாக அதிகளவில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சுன்னாகம் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆகிய பொலிஸ்நிலையங்களால் இவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் வைத்து வாள்வெட்டு நடவடிக்கை ஒன்றுக்கு தயாராக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.ஆயினும், குறித்த பிரதான சந்தேகநபரான தேவா அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார்.எனினும் ஒர் ரொக் டீம் எனும் வாள்வெட்டு கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர்.அதன் பின்னர் தேவா மற்றும் எனைய இருவர்களுடனும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மேற்குறித்த மூன்று பிரதான சந்தேகநபர்கள் தொடர்பாக தகவலறிந்தவர்கள் உடனடியாக சுன்னாகம் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த கோரியுள்ளார்.இதன்படி தகவலறிந்தவர்கள்- துஸ்மந்த அல்லது0724339000 – சுன்னாகம் பொலிஸ்நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிறியஷாந்த0778998901 – சுதாகரன் கான்ஸ்டபிள் அல்லது0772336249 – தயாளன் கான்ஸ்டபிள்தொலைபேசிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila