சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் செயற்பட்ட விதம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியில் போட்டியிட இடம் வழங்காத போது தமிழ்க் காங்கிரசின் காலில் விழுந்து ஆசனம் வழங்குமாறு கோரியிருந்தார்.தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இரண்டு தடவைகள் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கொண்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் தமிழரசுக் கட்சிக்கு ஓடினார் தான் ஒருபோதும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை எனப் பல தடவைகள் கூறியுள்ளார். எனவே, சீ.வி.கே. சிவஞானம் ஒரு அரசியல் விபச்சாரி.எங்களைப் பொறுத்தவரை வடமாகாண சபையில் காணப்படுகின்ற முதலமைச்சர் பதவியோ, அவைத்தலைவர் பதவிகளோ, அமைச்சர் பதவிகளோ தமிழ் மக்களுக்கு அடிப்படையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியதான கட்டமைப்புக்கள் அல்ல.
சீ.வி.கே ஒரு மோசமான சந்தர்ப்பவாதி : கஜேந்திரகுமார் கடும் சாடல்

Add Comments