இந்த நிலையில், சங்கத்தின் தலைவியான ஜெயவனிதாவின் காணாமல் போன மகள், ஜனாதிபதியுடன் நிற்பது போன்ற ஒளிப்படம் சர்வதேச ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவ்வாறான பின்னணியிலேயே அந்த சங்கத்தின் தலைவி புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் க.ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதியுடன் எனது மகள் நிற்பது போன்ற ஒளிப்படம் தொடர்பாகவும் அவர் கற்கும் காலப்பகுதியில் கல்வி சுற்றுலா சென்றமை உட்பட, காணாமல் ஆக்கப்பட்ட எனது மகள் தொடர்பான சகல விபரங்களையும் புலனாய்வுத்துறையினர் பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். |
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவியிடம் விசாரணை!
Add Comments