இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபையில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை உறுப்பினர்கள் அவைத் தலைவரிடமே கையளிக்க வேண்டுமென சீ.வீ.கே.சிவஞானத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர் அமிர்தநாயகம் நிக்சன். ஆளுநரிடமே கைளிக்க வேண்டும் என்றால் கூட அவைத் தலைவர் என்ற முறையில் சிவஞானம் அந்த பிரேரணையில் கையொப்பம் இட்டிருக்கவும் கூடாது, நேரில் சென்று கையளித்திருக்கவும் முடியாது. தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் நீங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டு ஆளுநரிடம் கையளிப்பதாக இருந்திருந்தால், அவைத் தலைவர் என்ற பதவியை இராஜினமா செய்துவிட்டு அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுநரின் வீட்டுக்கு அந்த இரவில் சென்றது அவைத் தலைவருக்குரிய வாகனத்திலேயாகும். ஆகவே அவை தலைவா தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.அல்லது அவைத் தலைவருக்குரிய கடமைகள் பற்றி சரியாகத் தெரியாதே பணியாற்றியுள்ளாராவெனவும் நிக்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்தை விட அரசியல் விஞ்ஞான விளக்கத்த்தின் படி நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருப்பவர், மாகாண சபைகளில் அல்லது மாநில சட்ட சபை ஒன்றில் அவைத் தலைவராக பதவி வகிப்பவர் தனது கட்சி சார்ந்து எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாதென்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே வடமாகாணசபையின் மாண்பினையும் தமிழ் அரசியல் போக்கின் முன்மாதிரியாகவும் வடமாகாணசபையின் தற்போதைய அவைத்தலைவர் பதவியிலிருந்து சீ.வீ.கே.சிவஞானம் ராஜினாமா செய்யவேண்டுமென மாகாணசபை உறுப்பினர்களான கே.சர்வேஸ்வரன் மற்றும் விந்தன் கனகரட்ணம் ஆகிய இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comments