“கடந்த 1983ஆம் ஆண்டு, ஜூலைக் கலவரம் நடைபெற்ற காலப்பகுதியில், நான் கொழும்பில் தான் இருந்தேன். எனக்குத் தெரிந்தவர்கள் கூட, காருடன் சேர்த்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அவ்வாறு, அந்தக் காலப் பகுதியில் நடந்த சம்பவங்கள் எல்லோருக்கும் தெரியும். அவ்வாறிருக்கையில், ஏழு பேர் தான் இறந்தார்கள் என்று கூறினால், சிரிப்பார்கள். இதனை யார், எதற்காகச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனாலும், அவ்வாறு ஏழு பேர் என்று கூறுவது தவறு. அந்தக் கலவரம் குறித்து எத்தனையோ நூல்களும் வந்துள்ளன. இந்நிலையில், அந்தக் கலவரம் குறித்து அமைக்கப்பட்டக் குழுக்கள் குறித்தும் முதலமைச்சரிடம் வினவியபோது,“இலங்கையில் அப்படித் தான் ஒவ்வொன்றுக்கும் குழுக்கள் அமைக்கப்படும். ஆனால், அந்தக் குழுக்களது கருத்துகள் நடைமுறைப்படுத்தவோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது. இது தானே, எங்களுடைய சரித்திரம்” என்று, இதன்போது முதலமைச்சர் கூறினார். |
ஜூலைக் கலவரத்தில் 7 பேர் தான் கொல்லப்பட்டனர் என்பது நகைப்புக் கிடமானது! - முதலமைச்சர்
Related Post:
Add Comments