அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலிருந்த பல கோடி ரூபா பெறுமதியான இரும்புகளை வெட்டி வெளியில் எடுத்துச் சென்ற பாரிய மோசடி தொடர்பில் பாரிய மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசா ரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் முன்னாள் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க, மேஜர் ஜெனரல் உதய பெரேரா, மேஜர் ஜெனரல் ஹதுருசிங்ஹ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையில் குறித்த உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிக்கு எதிராக சாட்சியமளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று சத்தியக் கடதாசி வழங்கியுள்ளார். ஆணைக்குழு முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ச நேற்று காலை ஆஜரானார். இதேவேளை, குறித்த இரும்புகளை வெட்டி எடுப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய உத்தரவிட்டதாகவும் அதனை ஏற்றே செயற்பட்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹெட்டியாரச்சி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார். இதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கத் தயார்! - கோத்தா இணக்கம்
Related Post:
Add Comments