வடக்கு - கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. சமஷ்டி என்ற சொல் வெளிப்படையாக இருக்காதென தெரிவித்துள்ள தமிழர சுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முக்கிய விடயமொன்றுக்காக எமது ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை சிறு காரணங்களுக்காக கவிழ்க்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்றையதினம் காலை 10 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை இந்த வருட முற்பகுதியில் வெளிவர வேண்டியிருந்த போதிலும் இதுவரை வெளியாக வில்லை. இதற்கு காரணம் அதில் உள்ள விட யங்கள் தொடர்பில் கட்சி குழுக்கூட்டத்தில் ஆராய வேண்டியுள்ளது என்பதாலேயே இடைக்கால அறிக்கை வெளிவருவது மேலும் தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளிலே நடவடிக்கை குழுவின் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து இடைக்கால அறிக்கை வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம். இந்த அறிக்கையினை விரைவில் வெளியிட வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.
யாருமே கூறாத 13ஆம் திருத்த சட்டத்தை பற்றி முதலமைச்சர் ஏன் பேசிக் கொண்டு ள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இடைக்கால அறிக்கை வரைபிலே 13 திருத்தம் பற்றி ஒருவசனம் கூட இல்லை. கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் அதியுச்ச அதி கார பகிர்வாக இருக்க வேண்டும் என சொல் லப்படுகிறது. இதனை பிரதம மந்திரியும் கூறி யுள்ளார். ஆகவே இல்லாத விடயம் தொடர்பில் ஏன் முதலமைச்சர் இவ்வாறு பேசுகின்றார் என்று தெரியவில்லை.
சமஷ்டி என்ற பெயர்ப்பலகை இருக்காது, ஆனால் சமஷ்டியின் இரு அடிப்படை அம்சங்கள் இருக்கும் என தேர்தலுக்கு முன்னதாகவே நான் கூறியிருந்தேன். அதே நிலைப் பாட்டிலேயே நாங்கள் தற்போதும் உள்ளோம். சமஷ்டி என்றால் வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் மாகாணத்திற்கு கொடுக்கப்பட்டால் அந்த விடயங்களில் மத்தி அதிகாரங்கள் செலுத்த கூடாது. அடுத்து வழங்கப்பட்ட அதிகாரங்களை மாகாண சபையின் அனுமதியின்றி மீள பெறமுடியாது.
இவை இரண்டுமிருந்தால் சமஷ்டி அதற்காக சமஷ்டி என்ற பெயர்ப்பலகை போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒற்றை யாட்சி என்ற சொற்பதத்தை நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள அதேவேளை ஒரு மித்த நாடு என்ற சொற்பதமே புதிய அரசிய லமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பிளவுபடாத நாடு என பொருள்படும்.
இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியும் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளார்கள். இதனை தான் முன்னேற்றகரமான நிலை என குறிப்பிட்டேன். சிங்களத்தில் ஒற்றையாட்சி என குறிப்பிடப்பட்டாலும் அது தமிழில் ஒற்றையா ட்சி என பொருள்படாது. இதற்கு வேறு வரை விலக்கணம் கொடுக்கப்படவுள்ளது.
ஆகவே நாங்கள் பெயர்ப்பலகைகளை போட்டு முரண்பாடான அணுகுமுறையை கடைப்பிடி க்கவில்லை. சிலர் வேண்டுமென்றே அந்த முரண்பாட்டை தோற்றுவிக்கின்றனர்.
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் மாகாணம் அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகு என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ள்ளது. இது இடைக்கால அறிக்கையில் வர வுள்ளது. இதனோடு சேர்ந்து வடக்கும் கிழ க்கும் இணைந்த ஒரு அலகாக இருக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இது இடைக்கால அறிக்கையில் வரும். எனினும் இறுதியாக எவ்வாறு அமையும் என தெரியவில்லை. குறிப்பாக ஒவ்வொரு மாகாணங்களும் இணங்கி னால்தான் மாகாணங்கள் இணைய கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. ஆகையால்தான் இது தற்போதைக்கு சாத்தியமில்லை என தனிப்பட்ட கருத்தை கூறுகின்றேன்.
மேலும் தமிழரசு கட்சியின் ஆதரவில்லாத புதிய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பு சட்டமாக இருக்க முடியாது. எங்கள் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்ற முடியாது என்ற அரசியலமைப்பு சட்டம் வரும் போது அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விலக்கி கொள்ளும். இருந்த போதிலும் அவ்வாறான ஒரு நிலைமை தற்போது இல்லை. எனினும் முக்கிய விடயமொன்றுக்காக எமது ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை சிறு காரணங்களுக்காக கவிழ்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.