வடமாகாணசபைக்கென சர்வதேச நாடுகளினிலிருந்து வருகின்ற நிதிகள் தொடர்பினில் கண்காணிப்புடன் செயற்படுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.இலங்கை அரசு சர்வதேச நாடுகளினிலிருந்து நிதியினை பெற்றுக்கொள்ளவும் அதே போன்று புலம்பெயர் அமைப்புக்களினை உடைத்து பலவீனப்படுத்தவும் வடமாகாணசபையினை பயன்படுத்த மேற்கொண்ட சர்வதேச மட்ட முயற்சி தோல்வியினை சந்தித்துள்ளது.
இந்நிலையினில் வடமாகாண முதலமைச்சர் வடக்கு மக்களது தேவைகள் தொடர்பினில் நேரடியாக வடமாகாணசபையுடன் பேசி சர்வதேச நாடுகள் கண்டறியவும் அதற்கேதுவாக நிதிகளை விடுவிக்கவும் கோரியுள்ளார்.வடமாகாணசபை சார்பினில் மத்தியிலுள்ள மைத்திரி –ரணில் அரசு தரகர் வேலையினில் ஈடுபடுவதை அவர் நிராகரித்துள்ளார்.
இந்நிலையினில் முதலமைச்சரினை புறந்தள்ளி தமிழரசு அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரனை முன்னிலைப்படுத்தி வடமாகாணசபை பிரதிநிதிகளாக சர்வதேசமெங்கும் இலங்கை அரசு தனது பிரச்சாரங்களை கடந்த சில மாதங்களாக முன்னெடுத்துமிருந்தது.
இதனை முதலமைச்சர் கண்டித்தமையும் அமைச்சர்கள் மட்ட பிரச்சினையின் மையமென சொல்லப்படுகின்றது.மத்தியிலுள்ள மைத்திரி –ரணில் அரசுடனான நட்பு மற்றும் நம்பிக்கையடிப்படையிலேயே சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாணைக்குழு முன்னிலையில் அல்லது மத்திய இலஞ்சஊழல் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவுள்ளதாக அமைச்சர்கள் இருவரும் சவால் விடுத்து செயற்படுகின்றமைக்கு காரணமென சொல்லப்படுகின்றது.
இந்நிலையினில் வடமாகாணசபையினை விற்று சர்வதேச நாடுகளினிலிருந்து நிதி பெற்றுக்கொள்வது என்ற விடயம் தொடர்பினில் முதலமைச்சர் அனைத்து அமைச்சின் செயலாளர்களிற்கும் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அவ்வாறு வருகின்றதென சொல்லப்படுகின்ற நிதி உண்மையினில் வந்தடைகின்றதா மக்களிற்கு உரியவகையினில் சென்றடைகின்றதா அவை தொடர்பிலான கணக்குகள் மற்றும் பொறுப்புக்கூறுதல்கள் தொடர்பிலேயே முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதனிடையே தமிழரசு அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரனது நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களினை பயன்படுத்தி நிதிகளை தேடி அரசிற்கு வழங்கிவருகின்றமை தொடர்பினில் பல தரப்புக்களும் விழிப்பு நிலைக்கு வந்துள்ளன.
இந்நிலையினில் நெதர்லாந்து அரசினதும் இலங்கை அரசினதும் கூட்டு நிதியில் வடக்கின் ஜந்து மாவட்டத்திலும் வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் 9 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களிற்கான இறுதி ஒப்புதல் குழுவினர் தற்போது வருகை தந்துள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் சுகாதார துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாண சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்த நெதர்லாந்து அரசானது 9 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாவினை வழங்க முன்வந்தது. இதன் எஞ்சிய தொகையான 4 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாவினை மத்திய சுகாதார அமைச்சின் நிதியில் வழங்கம் இணக்கம் கானப்பட்டது. இதன் பிரகாரம் மொத்தம் 14 ஆயிரம் மில்லியன் ரூபாவில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் 5 முக்கிய வைத்தியசாலைகள் தேர்த்தெடுக்கப்பட்டு பாரிய புனரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளன.
இதற்கான மத்திய சுகாதார அமைச்சின் அனுமதி , அமைச்சரவை அனுமதியுடன் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Add Comments