இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சமஷ்டியோ அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்ததோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் விடயத்தில் இதுதான் நடக் கும் என்பதை எம்மவர்கள் மிகத்தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.
இதையே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மிகத் தெளிவாக அண்மையில் கூறியிருந்தார்.
சமஷ்டியும் இல்லை; வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை ஆக பதின்மூன்றுக்கும் குறைவான தீர்வே தமிழ் மக்களுக்கு தரப்படப் போகின்றது.
இதனால் எமது மக்களுக்கு எந்தப் பிர யோசனமும் இல்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி வடக்கு மாகாண முதல மைச்சராகிய என்னை பதவியிலிருந்து இறக்கு கின்ற சதித் திட்டத்துக்கும் இதுவே காரணம்.
அதாவது நான் முதலமைச்சராக இருந்தால் பதின்மூன்றுக்குக் குறைவான எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டேன்.
அவ்வாறு ஏற்காவிட்டால் அது அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.
ஆகையால் என்னை பதவியில் இருந்து இறக்கிவிட்டு எந்த அதிகாரமும் உப்புச்சப்பும் இல்லாத தீர்வுத் திட்டத்தை அரங்கேற்றுவது தான் உண்மையான நோக்கம் என்றும் முதல மைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
தீர்வு என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றனர் என்பதை முதல மைச்சர் வெளிப்படுத்தி விட்டார் என்ற பதட்டத் தில் நாமும் உண்மையைக் கூறிவிடுவதே இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழி என்ற அடிப்படையில்,
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சமஷ்டியும் அல்ல; வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் அல்ல என்பதை கூறிவிடுவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்தது.
சரி; முப்பது ஆண்டு காலப் போராட்டம், எத்தனையோ தியாகங்கள், தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள், போர் தந்த வடுக்கள், வேதனைகள் என சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதில் எந்த அதிகாரமும் இல்லை என்றால்,
அதைப் பெற்றால் என்ன? பெறாமல் விட் டால்தான் என்ன என்ற கேள்வி எழும்.
இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் மேற் கூறப்பட்டதுதான் தீர்வு என்றால் நீங்கள் ஏன் என்ற கேள்வி கூட்டமைப்பை நோக்கி எழும்.
கடவுளே! அன்று சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியிருந்தால் இன்று இப்படியயாரு அவலநிலை நமக்கு வருமா என்று தமிழ் மக்கள் கேட்கின்றனர்.
ஏதோ தமிழ் மக்கள் விடயத்தில் கூட்டமைப்பு அரசியல் சாணக்கியத்துடன் செயற்படுவது போல நடித்து எங்களை ஏமாற்றி விட்டது என்பதைத் தவிர, இப்போதைக்கு வேறு எதனையும் சொல்ல முடியாது.