இந்திய போராட்டங்களிலிருந்து இலங்கை கற்க வேண்டிய பாடம்!

மனித குலத்திற்கு எதிரான அயோக்கியத்தனம் கலந்த அடாவடித்தனமான குற்றச் செயல்களைப் புரிந்து இந்த நாட்டை ஆண்டு வந்த எதேச்சாதிகாரத் தலைவர் அடுத்த ‘வெசாக்’ தினத்திற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டுகின்றேன் என வீரவசனம் பேசியுள்ளார்.
அடுத்த வெசாக் தினத்திற்கு முன்னர் தேர்தல்கள் எதுவும் நிச்சயிக்கப்பட்டிருக்காத படியால் அவரது வழி சதித்திட்டம் கலந்த வன்முறை நிறைந்ததாகவே இருக்க வேண்டும்.
அதேவேளையில், மத்திய வங்கியைக் கொள்ளையடித்துள்ளதாக மஹிந்த தரப்பினர் ஐ. தே. க. தலைவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மஹிந்த சுட்டியுரைப்பது போன்று இது திட்டம் போட்டு கூட்டாகச் செய்யப்பட்ட கொள்ளை ஒன்றாக இருந்தால், தனிநபர் விருப்பத்திற்காக செய்யப்பட்டதொன்றாக அது இருக்க முடியாது.
மாறாக, மஹிந்த அணியினரின் சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு ஏதுவாக அநேகமாக நிதி வசதியை ஏற்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட வகையில் அரசியல் ரீதியாக ஊக்குவிக்கப்பட்ட செயற்றிட்டமொன்றாக இருக்கக் கூடும்.
ஆமாம்! நான் இதற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளேன். ஏனெனில், கடந்த 1988/ 89 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் தேசப்பிரேமி இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு நாம் எவ்வாறு முகம் கொடுக்க நேர்ந்ததென்பது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது.
எது எப்படியிருந்த போதிலும், கணிசமான அதிகாரப் பகிர்வுடனான ஜனநாயக அரசியலமைப்பொன்றை உருவாக்கும் செயற்கிரமத்தில் நாம் இப்போதும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளோம்.
அதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது நல்லாட்சி அரசைக் கவிழ்ப்பதற்கான முன்னோடி நடவடிக்கையொன்றாக மஹிந்த அணியினர் தங்கள் அநாகரிகம் கலந்த அயோக்கியத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு பேரணியாக கொழும்புக்குச் செல்வர்.
இந்தக் காட்சிப் படலத்தில், இனங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் சமூகத்தினரால் நடாத்தப்பெற்ற ஏராளமான செயற்பாடுகளுள் ஒன்றாக கொழும்பில் கடந்த எட்டாம் திகதி நடைபெற்றிருந்த காலஞ்சென்ற முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்காரின் இருபதாவது நினைவுப் பேருரை நிகழ்வானது மிகவும் முக்கியமானதென்பதுடன், அது பல வழிகளில் குறிப்பிடத்தக்கதோர் நிகழ்வாகவும் இருந்தது.
மேற்படி நிகழ்வில் நினைவுப் பேருரையை நிகழ்த்திய துருக்கி நாட்டின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் டாவூத் ஒக்லு, தேசிய இனங்கள் குறித்து மேற்கத்தேய கோட்பாடுகளைப் பின்பற்றாத வகையில் அவற்றின் தோற்றம் மற்றும் மனித அடையாளங்களை அபிவிருத்தி செய்தல் பற்றி தெளிவுபடுத்தினார்.
துருக்கி நவீன காலம் வரை வேறுபட்ட மனித இனக் குழுமங்களைக் கொண்டதோர் நாடாகும். இந்த வரலாறானது நிச்சயமாக சுவாரஷ்யமாகவே இருந்தது.
எது எப்படி இருந்த போதிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆற்றப்பட்ட உரை கூடுதலான கவர்ச்சி மிக்கதாக அமைந்திருந்தது. அவர் தனது விரிவான உரையில் தேசிய பிரச்சினை குறித்து பகுத்தறிவுள்ள புதுமாதிரியான கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
அவரின் கூற்றுப்படி, இந்திய தேசம் பல்வேறு தேசிய இனங்கள், ஏராளமான மதங்கள் மற்றும் அநேகமான ஒப்புக்கொள்ள முடியாத நம்பிக்கைகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருக்கக் கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் வகையில் பின்னடைவுத் தன்மையுள்ள பாரம்பரியங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வந்திருந்தது.
உண்மையில், அதனை ஒரு மாபெரும் துணிகரச் செயலென்றே கூற வேண்டும்.அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அம்பேத்கார் மற்றும் ஈ.வே.ரா பெரியார் போன்றோர் பக்கபலமாக இருந்தனர்.
அத்தகைய வெற்றி இந்தியாவில் அடையப் பெற்ற வேளையில், ரஷ்யா ஒரே நாடு எனும் கோட்பாட்டில் அமைந்த சோசலிசக் கொள்கையில் மீண்டும் வீழ்ந்தது.
இந்தியாவின் உச்சபட்ச சட்டமாக மதிக்கப்படும் அரசியலமைப்பானது அடிப்படை அரசியல் கோட்பாடுகளை வரையறை செய்யும் சட்டகத்தை உருவாக்குகின்றது, அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, செயல்முறைகள், அதிகாரங்கள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை உருவாக்குவதுடன் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், கோட்பாடுகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றையும் வரையறுக்கின்றது.
இதுவே உலகில் உள்ள இறைமையுள்ள நாடுகளில் மிகவும் நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்.‘பெரியார் என அழைக்கப்படும் ஈ. வே. ராமசாமியின் ஆதரவைப் பெற்ற அரசியலமைப்பு வரைபுக் குழுவின் தலைவரான பீ. ஆர். அம்பேத்கார் இதன் பிரதான சிற்பியாக பரந்தளவில் கருதப்படுகின்றார்.
இந்த அரசியலமைப்பானது பாராளுமன்றமொன்றினால் உருவாக்கப்பட்டு அதன் முகவுரையில் பிரகடனமொன்றுடன் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதனால் இது பாராளுமன்ற ஆதிபத்தியத்தை அன்றி, அரசியலமைப்பு சார்ந்த ஆதிபத்தியத்தையே கொண்டு விளக்குகின்றது.
அரசியலமைப்பை பாராளுமன்றம் காரணங்காட்டாமல் இலகுவில் புறக்கணித்து விட முடியாது.இந்த அரசியலமைப்பானது இந்தியாவை இறைமை மிக்க, சோசலிச, மதச் சார்பற்ற, சோஷலிசக் குடியரசாக பிரகடனப்படுத்தி அதன் குடிமக்களுக்கு நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதுடன், அவர்களுக்கிடையில் சகோதரத்துவ மனப்பான்மையை ஊக்குவித்தும் வருகின்றதெனலாம்.
அரசியலமைப்பின் ஆதிபத்தியத்தை மாற்றியமைப்பதற்கான விடயத்தை தன்னால் அழித்து விட முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது அரசியலமைப்பில் உள்ள ஏதேனும ஒரு விடயத்தை திருத்தியமைக்கும் போது, அதனால் மாற்றமுடியாதுள்ள அடிப்படைக் கட்டமைப்பையோ அல்லது அதனது சட்டகத்தையோ ஒட்டுப் போட்டு செப்பனிடமுடியாதென்றே அது தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்பின் எந்தவொரு பாகமும் திருத்தியமைக்கப்படுவதிலிருந்து வெளிப்படையாக தடுக்கப்படுவதாக இருந்தாலும் கூட, அல்லது அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு அரசியலமைப்பின் தனித்த ஏற்பாடு இதனையும் பாதுகாக்க முடியாது. இருந்தாலும் கூட அத்தகைய அரசியலமைப்பு செல்லுபடியற்றதாகவே பிரகடனப்படுத்தப்படும்.
அடிப்படை அம்சங்கள் குறித்த இந்தக் கோட்பாடானது, அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் சுருக்கப்படவோ, நீக்கப்படவோ, ரத்துச் செய்யப்படவோ முடியாதென்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
இத்தகைய அடிப்படை அம்சங்களே அரசியலமைப்பின் ஆதிபத்தியமெனவும் அரசின் குடியரசு மற்றும் ஜனநாயக வடிவம் அரசியலமைப்பின் மதச் சார்பற்ற குணவியல்வு அதிகாரப் பிரிவினைப் பராமரிப்பு, அரசியலமைப்பின் சமஷ்டி முறைக்குணவியல்பு என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியலமைப்பை திருத்தி அமைக்கும் போது முன்னர் சொல்லப்பட்ட குணவியல்பு எதனையும் அழித்துக்கொள்ளாத வகையில் பாராளுமன்றம் எல்லைக்குட்பட்டு மாத்திரமே அதனைத் திருத்த முடியும்.
இந்தியாவில் ஜனநாயக மத்தியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பொன்றுக்கான போராட்டமானது காலம் தாழ்த்தி மேற்கொள்ளப்பட்டதொன்றாகும். நேருவும் அவரது குழுவினரும் பழைமை வாதக் கொள்கையில் ஊறிய பிராமணங்களின் அதிகாரத்தை ஆட்டத்தைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
அதிர்ஷ்டவசமாக, கல்வியறிவுள்ள பக்குவமடைந்த பிராமணர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளித்ததுடன், அவர்களால் வெற்றி பெறவும் முடிந்தது.
முடிவில், டொக்டர் அம்பேத்கர் அதனை ஒடுக்குமாறு எதிர்க்கட்சியினரை ஊக்கப்படுத்தியதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதுமான சீக்கிய மதத்திற்கு மாறினார்.
ஆயினும் சீக்கியத் தலைவர்களுடனான கூட்டத்தின் பின்னர் அறிஞர் ஸ்டீபன் பீ. கொஹென் விபரித்துள்ளவாறு சீக்கிய இரண்டாம் பட்ச அந்தஸ்தே கிடைக்குமென்றே கூறி முடித்தார். பதிலாக, அவர் தனது வாழ்நாள் பூராவும் பௌத்த மதத்தைக் கற்றார்.
1950 ஆம் ஆண்டளவில் அவர் தனது கவனத்தை பௌத்த மதத்தின்பால் செலுத்தியதுடன் உலக பௌத்த மதத் தலைவர்கள் கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
பூனே நகருக்கு அருகே புதிய பௌத்த விகாரையொன்றை அர்ப்பணித்த அதே சமயம் தான் பௌத்த மத நூலொன்றை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அந்தப் பணி நிறைவடைந்ததும் தான் சம்பிரதாயபடி பௌத்த மதத்திற்கு மாறி விடுவதாகவும் அறிவித்தார்.
இரண்டு தடவைகள் பர்மாவுக்கு 1954 ல் விஜயம் செய்திருந்த அவர், இரண்டாவது தடவை பயணத்தின் போது பர்மியத் தலைநகர் ரங்கூனில் நடைபெற்ற மூன்றாவது பௌத்த மதத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
கடந்த 1955 இல் அவர் பாரதீய பௌத்த மத சபை அல்லது இந்திய பௌத்த சங்கத்தை நிறுவினார்.புத்தரும் அவரது போதனைகளும் எனும் தலைப்பிலான நூலை இயற்றி முடித்தார்.
அவரது மறைவின் பின்னர், 1956 இல் அது வெளியிடப்பட்டது.கொடுங்கோல் ஆட்சிகளுக்கெதிரான போராட்டம்பழமைவாதிகளான பிராமணர்கள் ஈ.வெரா. பெரியாரினதும் அம்பேத்காரினதும் தொடர்பைத் துண்டித்து விடுவதற்கு தற்போதும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர்.
ஈ.வே.ரா பெரியார் அம்பேக்கரை மூன்று தடவைகள் நேரில் சந்தித்துள்ளார்.அவர்களிருவரும் இந்துக்கள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் திராவிடர்களுக்கென தனி மாநிலங்களை உருவாக்குவது பற்றி கலந்துரையாடினார்.
அம்பேத்கார் பெரியாரை பௌத்த மதத்தை தழுவுமாறு வற்புறுத்திய போது, தான் இந்து மதத்தில் இருந்தவாறே அதனை விமர்சிக்க முடியுமென பதிலளித்தார்.
கொடுங்கோன்மைக்கெதிராகப் போராடவே அவர் இந்து மதத்தில் தொடந்தும் இருக்க விரும்பினார்.இந்த இரு தலைவர்களும் சமத்துவம், தன்னாட்சி, மற்றும் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் ஐக்கியம் குறித்தே கலந்துரையாடினர்.
அதனால் அவர்களால் இந்தியாவின் மதிப்புமிக்க தலைவர்களாக மிளிர முடிந்தது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கான இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
சில விடயங்கள் இன்னமும் இருளிலேயே மூடிக்கிடக்கின்றன. ஆயினும் போராட்டம் இன்னும் முடியவேயில்லை.இலங்கையர்களாகிய நாம் ஒத்த தன்மையுள்ள குறிக்கோள்களுடன், நோக்கங்களுடன் அரசியலமைப்பு விடயத்தில் முன்னோக்கிச் செல்லப் போகின்றோமா? ரணிலின் பேச்சு மிகவும் சாதகமானதாகவும் தெளிவாகவும் அமைந்திருந்து.
அது அரசாங்கத்தின் கருத்தாக இருப்பின் நாம் எதிர்பார்ப்பு மிக்கவர்களாக இருக்க முடியும்.வன்முறை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கங்கணம் கட்டி நிற்கும் இனவாத மற்றும் இராணுவ கீர்த்தி பெறுவதில் மூட ஆர்வமுடைய சக்திகளுக்கெதிராக இனங்களுக்கிடையே ஒற்றுமையை விரும்பும் மக்கள் படையினர் தற்போது ஒன்றுபட்டு நிற்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
கூட்டு எதிரணி என அழைக்கப்படும் அத்தகைய அணியினர் தற்போது புதிய ஜனநாயக அரசியலமைப்புக்கெதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சிங்கள பெரும்பான்மையினருக்கு எதிரானதெனக் கூறி சிங்கள கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு இனவிரோத உணர்வுகளை ஊட்டி வருகின்றனர்.
கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila