விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது! இந்தியாவில் போர்க்கொடி

விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அழகிரி இந்திய ஊடகங்களிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்
“விடுதலைப்புலிகளால் ஐரோப்பா யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம்.
காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் நலனோடு இணைக்கக்கூடாது.
தீவிரவாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது, “வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்” என்று பிரகடனப்படுத்திய தி.மு.க வுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் நிலையே தி.மு.க வின் நிலை என கருணாநிதி தெளிவாகக் கூறியுள்ளார்.
எனவே, தி.மு.க வின் நிலையில் மாற்றம் வரும் என நான் நினைக்கவில்லை. ஒரு காலத்தில் கருணாநிதியையே அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் வேறு ஒருவரை அமரவைக்க விடுதலைப் புலிகள் முயற்சித்ததாக கருணாநிதியே அறிவித்திருக்கிறார்.
அதனால், தி.மு.க வே பிளவுபட்டது ஸ்டாலினுக்குத் தெரியாதா? இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காகப் போராட தாய்த் தமிழகம் தயாராக உள்ளது. அதுவும் ஜனநாய வழியில். அதனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பா யூனியன் நாடுகள் கடந்த வாரம் நீக்கியிருந்தன.
இந்த நிலையில், இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்திருந்ததுடன், இந்தியாவும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila