இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கா ஆகியோருக்கு எதிராக தெற்கினில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள இனவாத அமைப்புக்களது போராட்டம் திருகோணமலைக்கும் திரும்பியுள்ளது.சிங்கள பிக்குகள் சிலர் சகிதம் குறித்த எதிர்ப்பு போராட்டம் திருகோணமலையின் மணிக்கூடு கோபுர முன்றலில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
பௌத்த மதகுருமார் சிலரது வழிநடத்தலில் சிங்கள குடியேற்வாசிகள் சிலருடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கா ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.இறுதியினில் அவர்களிற்கு எதிராக அவர்களது கொடும்பாவிகளை தீயிட்டெரித்தும் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இறுதி யுத்ததினில் கோத்தபாயவின் உத்தரவின் பேரினில் இனஅழிப்பினை மேற்கொண்டதாக இராணுவத்தளபதிகள் சிலரை குற்றஞ்சாட்டி முன்னாள் இராணுவத்தளபதிபதியும் தற்போதைய அரசின் அமைச்சருமான ஜெனரல் சரத்பொன்சேகா கருத்துவெளியிட்டிருந்தார்.இதற்கு எதிராக இராணுவத்தை காட்டிக்கொடுத்துவிட்டதாக தெற்கினில் இனவாத அமைப்புக்கள் கூக்கிரலிட்டுவருகின்ற நிலையினில் சரத்பொன்சேகாவிற்கு பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கா ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.