கிளிநொச்சியில் உள்ள வங்கிக் கிளை யயான்றில் நினைவேந்தலை செய்த வங்கி உத்தியோகத்தர்கள் இருவர் தலைமை அலு வலகத்தால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட் டுள்ளனர் என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே-18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூருகின்ற நாள்.
இந்த நாட்டில் நடந்த மிகக் கொடூரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக் கள் கொல்லப்பட்டனர்.
தமிழ் இனத்தை அழிப்பது போல இந்தக் கொடூரச் செயல் நடந்தேறியது. இதுபற்றி தென்பகுதிச் சிங்கள மக்கள் அறியாமல் இருந் திருக்க முடியாது.
எனினும் தாம் செய்த நிட்டூரத்தை மறைப் பதற்காகவும் போர்க்குற்றச் செயல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற் காகவும் பேரினவாதிகள் வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும்,
மே 18 நினைவேந்தல் விடுதலைப் புலிக ளின் தலைவரை நினைவுகூருகின்ற நாள் எனவும் கபடத்தனமாக பிரசாரங்களை மேற் கொண்டு வருகின்றனர்.
மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் பல்லா யிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி; உயிரி ழந்த தங்கள் உறவுகளுக்காக கண்ணீர் விட்டு அழுது புலம்புகின்ற நிகழ்வுகள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றபோது,
இந்த நாட்டின் ஒரு முக்கியமான வங்கி நிர் வாகம் அதனை அறியாமல் இருந்திருக்க நியாயமில்லை.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இரண்டு நிமிடமேனும் அனுஷ்டியுங்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் பொதுவான வேண்டுகோளை விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலி வட மாகாணத்திலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், பொது அமைப்புக்களில் இடம் பெற்றன.
உண்மையில் மே 18இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக விடுமுறை வழங்கப்பட்டி ருக்க வேண்டும்.
அதனைச் செய்வதற்கான அதிகாரம் இல்லை எனும்போது, பூரண ஹர்த்தால் அறிவிப்பு மூல மாக அனைத்து நிறுவனங்களும் பூட்டப்பட, மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ் டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பணி முடக்கம் ஏற்படாமல் நினை வேந்தலைச் செய்வது எனத் தீர்மானித்ததற் கமைய வங்கிப் பணியாளர்கள் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.
இஃது தவறு என்று வங்கி நிர்வாகம் கருதி யிருந்தால் அது மிகப்பெரும் அநீதி.
ஏனெனில் கொடிய யுத்தத்தில் இறந்தவர் கள் வங்கி உத்தியோகத்தர்களின் உறவுக ளாக இருக்கலாம். ஏன் குறித்த வங்கியின் வாடிக்கையாளர்களாகக் கூட இருக்கலாம்.
இந்நிலையில் போரில் உயிரிழந்த அப்பா விப் பொதுமக்களை நினைவுகூருங்கள் என்று பெருந்தன்மையோடு வங்கி நிர்வாகங்கள் அறிவித்திருக்க வேண்டும்.
அதைவிடுத்து வடக்குத் தமிழர்களின் பண த்தை எடுப்பதுதான் எங்கள் வேலை; நினை வேந்தல் அல்ல என்றால் வங்கிகள் தங்கள் சமூகப் பொறுப்பை இழந்து போகின்றன என்றே பொருள் கொள்ள வேண்டும்.
எதுஎவ்வாறாயினும் பணி இடைநிறுத்தத்தை உடனடியாக இரத்துச் செய்வதுதான் முதல் வேலை. இதனை வங்கி நிர்வாகம் செய்யும் என நம்பலாம்.