சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையே தமிழ் மக்கள் கோருகின்றனர். எனினும் சமஷ்டி மூலம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக கூறப் படுகின்றது.
அவ்வாறு எந்த ஒரு எதிர்பார்ப்பும் தமிழ் மக்களிடம் இல்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கள தேரரிடம் தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் பௌத்தர்களும் பௌத்த மகாநாயக்கர்களும் வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாண சபையையும் இன வாதிகள் என்ற நோக்கில் நோக்கப்படுகின்ற நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சருடன் வடமாகாண அமை ச்சர்களான கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோரும் தமிழ் மக்கள் பேர வையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
முதலமைச்சர் குழுவினர் இன்று ஞாயி ற்றுக்கிழமை அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தி த்துப் பேசவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது மல்வத்த மகா நாயக்கருக்கு வடமாகாண முதலமைச்சர் தான் ஒரு இனவாதியல்ல என்பதை எடுத்து ரைத்ததுடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கியு ள்ள பிரச்சினைகள் குறித்துத் தெளிவுபடுத் தியுள்ளார்.
தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சி னைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக் கும் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் முதலமைச்சர் மல்வத்த மகாநாயக்கருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண் கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், யுத்தம் காரணமாகவே வடக்கிலும் கிழக்கி லும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் விதவைகளாகவும், வலிந்து ஆட்கள் காணா மல் ஆக்கப்பட்டதனால், பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமைதாங்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
தனது மூன்று குழந்தைகளையும் தன் னுடன் அழைத்துச் சென்றிருந்த அமைச்சர் அனந்தி சசிதரன், தனது கணவர் இராணு வத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயி ருப்பதாகவும், அவருக்கு என்ன நடந்தது என்
பது குறித்து தனது பிள்ளைகள் நித்தம் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதிருப்பதாகவும் கூறியுள்ளார்;.