சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய நிதி ஆணைக்குழு ஆகிய ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சுயாதீன ஆணைக்குழு மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளும் விதத்தில், சுயாதீனமாக செயற்படுகின்றமை குறித்து இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் பதவி வெற்றிடத்திற்காக, இதுவரை காலம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய கே.ரி.சித்ராசிறியை நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை வழங்கியிருந்தமைக்கான அனுமதி இன்றைய அரசியலமைப்பு சபை கூட்டத்தில் கிடைத்துள்ளது.
இதன் பிரகாரம், கே.ரி.சித்ராசிறி உயர்நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.